பணப்புழக்கம் வீட்டில் அதிகரிக்க பரிகாரம்.. என்னென்ன பொருட்கள் வேண்டும்?
பொதுவாக நம்மிள் பலர் பணத்தை ஓடி ஓடி சம்பாதிப்பார்கள். ஆனால் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு கூட பணம் வீட்டிற்குள் வராது.
இன்னும் சிலர் வேலையில் பிரச்சனை, செய்யும் தொழிலில் பிரச்சனை, என பிரச்சினையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வீட்டில் எப்படியாவது கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்தால் கூட ஏதாவது ரூபத்தில் பணத்தட்டுப்பாடு வந்து கொண்டே இருக்கிறது.
இது போன்ற கவலைகள் இருப்பவர்கள் தெய்வத்திடம் தான் முறையிட வேண்டும். வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிடம் கூறுகிறது.
முழு நம்பிக்கையுடன் இறைவனிடம் ஒரு சில விடயங்களை கேட்கும் பொழுது கேட்பதற்கு இரட்டிப்பாக அவர் பலன் தருவார்.
அந்த வகையில், வெள்ளிக்கிழமைகளில் செய்யக் கூடிய பரிகாரம் என்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பரிகாரம்
நாட்டு சர்க்கரையில் செய்த இனிப்பு பொருட்களை எறும்புகளுக்கு வைத்தால் பண தட்டுபாடுகள் நீங்கும். பாலால் செய்யப்பட்ட இனிப்பு பொருட்களையும் இப்படி எறும்புகளுக்கு வைக்கலாம்.
உதாரணமாக சர்க்கரை பொங்கல் அல்லது வேறு ஏதாவது இனிப்பு பலகாரங்களை கூறலாம்.
கடைகளில் இருக்கும் மில்க் ஸ்வீட், பால்கோவா ஆகிய பொருட்களை வாங்கி எறும்புகளுக்கு வைக்கலாம். பரிகாரத்திற்கு இனிப்பு வைக்கும் பொழுது வெறும் தரையில் வைக்காமல் கற்பூரவள்ளி இலை, அரச இலை ஆகிய இலைகளை பயன்படுத்த வேண்டும்.
இந்த இலைகளை பயன்படுத்தி பரிகாரம் செய்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் செய்யும் பொழுது மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
வருமானத்தில் ஏற்படும் தடை, வேலையில் இருக்கும் தடை, தொழிலில் இருக்கும் தடை நீங்கி பண வரவு அதிகமாகும். எறும்புகளுக்கு உணவு கொடுப்பதில் அப்படி என்ன இருக்கிறது என பலரும் யோசிக்கலாம்.
இப்படி செய்வதால் உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும். நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் இப்படியான காரியங்களினால் தீர்வுக்கு வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |