நீங்கள் குடிக்கும் மோர் உண்மையில் மோர் இல்லையாம் - அப்போ மோர் என்றால் என்ன?
இந்தியாவில் கோடை காலங்களில் மிகவும் அதிகமாக அருந்தப்படும் மோர் உண்மையில் மோர் இல்லை அதை செய்யும் முறையே வேறு என உணவு நிபுணர்கள் கூறுகின்றர்.
மோர்
கோடை காலம் வந்து விட்டால் தமிழ்நாட்டில் மோர் கடைகளுக்கு பஞ்சம் இருக்காது. இது வீடுகளிலும் செய்து குடிப்பார்கள். அப்படி செய்யும் போது தயிரில் தேண்ணீர் கலந்து இன்னம் சில பொருட்களை கலந்து மோர் என குடித்து வருகிறார்கள்.
இந்த பானத்தை குடித்தால் வயிறு லேசாக உணரப்படும். அத்துடன் உடலை புத்துணர்ச்சியூட்டும், மற்றும் செரிமானத்திற்கு உதவுவது போன்ற நன்மைகளை தருகிறது.
இந்த திரவம் இயற்கையாகவே கொழுப்பு குறைவாக உள்ளது மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்தும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது.
அதிலும் தயிர் அல்லது பாலை விட ஜீரணிக்க மிகவும் எளிதானது. இப்படி மோரில் உள்ள நன்மைகள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

உண்மையில் மோர் என்றால் என்ன?
தயிரை நன்றாக குலுக்கி அதை அறைத்து அதிலிருந்து வெண்ணையை பிரித்து எடுக்க வேண்டும். இதை பிரித்த எடுத்த பின்னர் அதில் மீதமாகி வரும் தண்ணீர் தான் உண்மையில் மோர்.
இந்த மோர் இயற்கையாக கொழுப்பு குறைவானது லேசான, சிறிது காரமான சுவை புரோபயாடிக் (நல்ல பாக்டீரியா) நிறைந்தது மிக லேசான நிலைத்தன்மை கொண்டது பலருக்கும் ஜீரணிக்க எளிதானது போன்ற நன்மைிகளை மக்களுக்கு அள்ளிக்கொடுக்கும்.

தண்ணீர் சேர்த்த தயிர் ஏன் ‘உண்மையான’ மோர் அல்ல?
தயிரில் தண்ணீர் சேர்த்து குடிப்பது வழக்கமாக இருந்தாலும் இது பாரம்பரிய மோரை போல வராது. தயிரை தண்ணீரில் சேர்க்கும் போது அதில் வெறும் அடர்த்தி மட்டும் குறையும்.
அதில் உள்ள கொழுப்பு, லாக்டோஸ், புரோட்டீன், பாக்டீரியா இவை எல்லாம் அதே விகிதத்தில் தான் இருக்கும். தண்ணீர் சேர்த்ததால் வெறும் அளவு மட்டுமே அதிகரிக்கும்.தண்ணீரைச் சேர்ப்பது நொதித்தலைத் தூண்டாது அல்லது பாக்டீரியா வளர்ச்சியை அதிகரிக்காது.

அதற்கு பதிலாக, அதே தயிரை அதிக அளவில் மட்டுமே நீட்டுகிறது. புரோபயாடிக் ஆதரவை குறிப்பாகத் தேடுபவர்களுக்கு, நீர்த்த தயிர் கணிசமாகக் குறைவான நன்மைகளை வழங்கக்கூடும்.
வீக்கம், வாயு அல்லது ஒழுங்கற்ற குடல் இயக்கங்களால் போராடுபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது, ஏனெனில் புளித்த மோரில் காணப்படும் செயலில் உள்ள பாக்டீரியாக்கள் சிறந்த நிவாரணத்தை இது கொடுக்கும்.
எனவே மோர் எது என்பதை அறிந்து அதன் நன்மைகள் வேண்டும் என நினைப்பவர்கள் முறையாக அருந்தினால் நன்மை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |