தண்ணீர் தொட்டி கருப்பாக இருக்க இப்படியொரு காரணமா? நிச்சயம் தெரிந்திடாத விடயம்
நம் வீடுகளில் காணப்படும் தண்ணீர் தொட்டிகள் உருளை வடிவத்தில் பெரும்பாலும் கருப்பு நிறத்திலேயே காணப்படும். இதற்கான காரணம் நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உருளை வடிவத்தில் இருக்க காரணம்
தண்ணீர் தொட்டிகள் உருளையாக இருக்க, நீர் அழுத்தம் முக்கிய காரணம். ஒரு கோள அல்லது உருளை தொட்டி தான் அழுத்தத்தை தொட்டி முழுவதும் சமமாக விநியோகிக்கப்படுவதுடன், இதற்கான செலவும் குறைவாகவே இருக்கின்றதாம்.
மேலும் தொட்டிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பிவிசி (PVC), ஒரு உருளை வடிவத்தில் செய்யப்படும்போது விரிசல் ஏற்படுவதைத் தடுக்கின்றதாம். இந்த இரண்டு காரணத்திற்காகவே உருளை வடிவத்தில் இருக்கின்றதாம்.
தண்ணீர் தொட்டிகள் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளன?
கருப்பு நிறம் சூரிய ஒளியை உறிஞ்சுவதால், மற்ற வண்ண தொட்டிகளுடன் ஒப்பிடும்போது இது ஆல்கா (பாசி, பூஞ்சை) வளர்ச்சியை குறைக்கிறது.
தண்ணீர் தொட்டியின் வெளிப்புறத்தில் கோடுகள் இருப்பதற்கு காரணம் என்னவெனில், அதிக சுமை அல்லது நீர் அழுத்தம் காரணமாக தொட்டி உடைவதைத் தடுப்பதற்காக இந்த கோடுகள் காணப்படுகின்றதாம்.