மரத்தில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்- அலைமோதிய மக்கள்; வைரலாகும் அரிய காட்சி!
இந்த உலகில் பல இடங்களில் பல விதமான விசித்திரங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அவை நமக்கு இணைய தளங்கள் வழியாகவும் தெரிய வருகிறது.
இதையடுத்து, பல மரங்களில் இருந்து பால் வருவதும் தண்ணீர் வருவதை பார்த்தும், கேள்விப்பட்டும் இருப்போம்.
அந்த வகையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வேல்முருகன் நகர் பகுதியில், உள்ள ஒரு பெரிய மரத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்துகொண்டு வருகிறது.
தண்ணீரை பிடிக்க அப்பகுதி மக்கள், ஆர்வம் காட்டி அலைமோதுகின்றனர். பலரும் எப்படி இது சாத்தியம் பைப் ஏதாவது உள்ளதா? என கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
இது சம்பந்தமான வீடியோ காட்சி வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வேல்முருகன் நகர் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்த காட்சி #Madurai pic.twitter.com/8VPgnT50dw
— Jaya Plus (@jayapluschannel) August 26, 2021