“இனி கோதுமையை நம்பி வேலை இல்லை..” தொங்கி கொண்டிருக்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைக்க ஒரு டிப்ஸ்!
பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் தொந்தியை குறைக்க வேண்டும் என பல முயற்சிகள் எடுப்பார்கள்.
காலையில் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஜிம்மிற்கு செல்ல வேண்டும் மற்றும் டயட் பின்பற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பிளான் போட்டிருப்போம்.
ஆனால் அதனை செயற்படுத்த முடியாமல் காலங்கள் செல்ல செல்ல அவர்களின் எடையை அதிகரித்து கொண்டே செல்லும்.
இவ்வாறான முயற்சிகளுக்கு மத்தியில் நமக்கு இருக்கின்ற ஒரே வழி உணவு கட்டுபாடு மட்டும் தான்.
அந்த வகையில் உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் சில உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
எப்படி குறைக்கலாம்?
கோதுமை உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடையை பலரும் குறைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதற்கான நாட்கள் சென்றுக் கொண்டிருக்குமே தவிர அதனை செயற்பட காலம் எடுக்கும்.
மாறாக நீர் கஷ்கொட்டை (water-chestnut) என்ற பழத்தை தினமும் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என சில பரிந்துரைத்துள்ளார்கள். இதனை “தண்ணீர் பழம் ” என்றும் அழைப்பர்.
நீர் கஷ்கொட்டையில் கால்சியம், வைட்டமின்-ஏ, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.
தண்ணீர் கஷ்கொட்டை மாவு எப்படி சாப்பிடுவது?
தண்ணீர் பழ மாவில் ரொட்டி, பக்கோடா, பூரி போன்ற உணவுகள் செய்யலாம். இந்த உணவை காலையில் சாப்பிட்டால் போதும் மதியம் வரை பசியே வராது. இதனால் உங்களின் எடை வேகமாக குறையும்.
தண்ணீர் கஷ்கொட்டை மாவின் நன்மைகள்
1. பொதுவாக தைராய்டு பிரச்சனையுள்ளவர்கள் இந்த மாவை பயமில்லாமல் சாப்பிடலாம். ஏனெனின் அதில் வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் அயோடின் ஆகிய ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.
2. காலையில் இந்த மாவில் ஏதாவது செய்து சாப்பிட்டு வந்தால் பசியே இருக்காது. உடலுக்கு சக்தியையும் தரும்.
3. இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த பழத்தை தைரீயமாக எடுத்து கொள்ளலாம். ஏனெனின் இதில் பொட்டாசியம் மற்றும் சோடியம் சத்துக்கள் மிகுந்துள்ளது.