சிறுமியை ரயிலுக்கு நடுவில் படுக்க வைத்து எமனுக்கு அல்வா கொடுத்த நபர்!
சிறுமியின் உயிரை காப்பதற்காக எமன் போல வந்த ரயிலுக்கு அடியில் குதித்த நபரின் துணிச்சல் மிக்க வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த பிப்ரவரி 5ம் தேதி அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பர்கேடி பகுதியில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் இருந்து திரும்பிய தச்சர் முகமது மெஹபூப் என்பவர், சில பாதசாரிகளுடன் தண்டவாளம் ஒன்றை கடப்பதற்காக காத்திருந்தார்.
அப்போது பெற்றோருடன் ரயில் பாதையை கடக்க முயன்ற சிறுமி, தண்டவாளத்தில் தவறி விழுவதை கண்டார்.
Incredible bravery! 37 year old Mehboob was returning to his factory when he and some other pedestrians saw a goods train they stopped to let it pass a girl standing with her parents in fell on the tracks Mehboob sprinted dragged kept her head down @manishndtv @GargiRawat pic.twitter.com/IDqQiBLAv7
— Anurag Dwary (@Anurag_Dwary) February 12, 2022
அந்த சமயம் பார்த்து சரக்கு ரயில் ஒன்றும் சிறுமி விழுந்துள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். திகைத்து நின்ற பார்வையாளர்களுக்கு மத்தியில், துணிச்சலாக முடிவெடுத்த முகமது மெஹபூப், தனது உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தண்டாவளத்திற்குள் டைவ் செய்தார், ஊர்ந்த படியே சென்று சிறுமியை தண்டவாளத்திற்கு நடுவில் இழுத்துப்போட்டார்.
கண் இமைக்கும் நொடியில் பயணியை மீட்டு, பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்த வீரரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.