இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் ஆபத்து உறுதியாம்... எச்சரிக்கும் மருத்துவர்!
உடல் உறுப்புகளுள் மிகவும் முக்கியமான உறுப்புக்களுள் ஒன்றான கல்லீரல் உடலில் 500 இற்கும் மேற்பட்ட தொழிலை செய்கின்றது.
குறிப்பாக நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு இந்த உறுப்பு இன்றியமையாதது. மேலும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதிலும் கல்லீரல் முக்கிய பங்கு அளப்பறியது.
கல்லீரல் பாதிப்புகளில் மிகவும் அபாயகரமான பாதிப்பு தான் ஃபேட்டி லிவர் அதாவது கொழுப்பு கல்லீரல் நோய் என அறியப்படுகின்றது.
இந்நிலை அதிகப்படியான மதுபானங்கள் அருந்துவதால் ஏற்படக்கூடியதாகவோ அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய் காரணமாகவும் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
அதன் முக்கிய அறிகுறிகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் தற்காலத்தில் பல்வேறு வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக கொழுப்பு கல்லீரல் நோய் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது.
இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொழுப்பு கல்லீரல் நோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை பகிர்ந்துள்ளார். இது குறித்த முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய அறிகுறிகள்
எதிர்பாராத அளவில் உடல் எடை அதிகரிப்பதாக உணர்ந்தால் உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுவதாக மருத்துவர் எச்சரிக்கின்றார்.
குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்புக்களானது தேங்யிருந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இரவில் நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவித்த பின்னரும் காலையில், மிகுந்த உடல் சோர்வையும், உடல் பலவீனத்தையும் சந்திப்பது கல்லீரல் ஆபத்தில் இருப்பதன் முக்கிய அறிகுறியாக அறியப்படுகின்றது. நீங்கள் போதுமான ஓய்வை எடுத்த பின்னரும், தொடர்ச்சியாக உடல் சோர்வை சந்தித்தால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
தீடிரென அடிவயிற்றில் வலி மற்றும் மேல் வயிற்று வீக்கம் அடிவயிற்றுப் பகுதியில் மிகுந்த வலியுடன், ஒருவரது மேல் வயிற்றின் வலது பக்கத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அது கொழுப்பு கல்லீரல் நோயின் பிரதான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட காரணங்கள் இன்றி அடிவயிற்று பகுதியில் திடீரென்று அதிக வலியை அனுபவித்தால் அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது.
சர்க்கரை உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளாத போதும் உடவில் சர்க்கரை இரத்த சர்க்கரை அளவு குறையாமல் உயர் நிலையில் இருந்தால், அந்நபருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
ஒருவர் அடர் நிறத்தில் சிறுநீரையோ அல்லது வெளிரிய நிறத்தில் மலத்தை வெளியேற்றுகின்றார் என்றால், அந்நபரின் கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்பதை குறிக்கும்.அடர் நிறத்தில் சிறுநீர் கழிப்பது என்பது உடல் சூட்டினாலும் நிகழக்கூடும்.
ஆனால் அப்படி உடல் வெப்பமடையும் வகையில் எதுவும் செய்யாமல், ஒருவர் அடர் நிறத்தில் சிறுநீரை கழித்தால், அந்நபருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
ஒருவரது சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், இரத்தத்தில் பிலிரூபின் அதிகம் இருப்பதாக அர்த்தம். எப்போது கல்லீரலால் சரியாக செயல்படாமல் போகிதோ, அப்போது இரத்தத்தில் பிலிரூபின் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
ஒருவரது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அந்நபருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்டுகின்றது.
மேலும் சருமத்தில் கடுமையான அரிப்புக்களை சந்திப்பதோடு, அப்படி அரிப்பதனால் சருமத்தில் காயங்கள் ஏற்பட்டால், கொழுப்பு கல்லீரல் நோய் முற்றிய நிலையில் இருப்பதாக அர்த்தம். எனவே இந்த முக்கிய அறிகுறிகளை அனுபவித்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |