உங்கள் தலைமுடி பட்டுபோல வைத்து கொள்ள வேண்டுமா? வாழைப்பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க
நம்மில் பல பெண்களுக்கு தலைமுடி பட்டுப்போல் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் அவ்வாறு இருப்பதில்லை. இதற்காக கண்ட கண்ட ஷாம்புக்கள், கிறீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.
இருப்பினும் இது நிரந்த தீர்வினை தராது. இதற்கு இயற்கைமுறையில் கூட தீர்வினை காணமுடியும். பளபளப்பான முடிக்கான நல்ல ஹேர் மாஸ்க்கை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கலாம். அதற்கு வாழைப்பழம் பெரிதும் உதவுகின்றது.
இதனை பச்சை பயறுடன் சேர்த்து கொள்ளலாம். தற்போது இந்த ஹேர் மாஸ்க்கை எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
image - glitchesandstitches
எப்படி செய்வது?
நல்ல பழுத்த வாழைப்பழத்தை உரித்து, ஒரு பாத்திரத்தில் பிசைந்து கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து பேஸ்டாக மாற்றவும்.
இப்போது உங்கள் தலைமுடியைப் பிரித்து, உங்கள் உச்சந்தலையில் மற்றும் உங்கள் முடியின் நீளம் முழுவதும் தடவவும். 15-20 நிமிடங்கள் அப்படியே உலர வைக்க வேண்டும்.
பின்னர், மெதுவாக ஸ்க்ரப் செய்து, லேசான ஷாம்பூவைக் கொண்டு கழுவுங்கள்.
இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை தடவினால், நிச்சயமாக உங்கள் முடி உதிர்வு நீங்கி, உங்கள் முடி பிரச்சனைகளுக்கு ஓய்வு கிடைக்கும்.
இந்த ஹேர் மாஸ்க் எந்த வயதினருக்கும் ஏற்றது மற்றும் ஆண்களும் பயன்படுத்தலாம்.