உடல் எடையை குறைக்க எது சிறந்தது ? வாக்கிங் vs ஜாகிங்
பொதுவாக டல் எடையை குறைக்க மிக எளிமையான பயிற்சி என்ன என்று யாரை கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே பதில் நடைபயிற்சி அல்லது ஜாகிங் தான்.
மாறாக இந்த பயிற்சிகளில் வாக்கிங், ஜாகிங் இரண்டில் எது ஆரோக்கியமானது என்று பலருக்கும் தெரியாமல் இருக்கும். வாக்கிங், ஜாகிங் இரண்டு பயிற்சிகளும் நடையுடன் தொடர்புடையது.
இரண்டு ஏகப்பட்ட நன்மைகளை எமக்கு கொடுத்தாலும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் அவர்களின் உடல் நிலையை பொறுத்து இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது சிறந்தது.
அந்த வகையில் வாக்கிங், ஜாகிங் இரண்டிலும் இருக்கும் நன்மை, தீமைகளை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. நடைபயிற்சி
நடைபயிற்சி குறைவான ஆபத்து கொண்ட மென்மையான உடற்பயிற்சி. இந்த பயிற்சியை தேர்வு செய்வதால் பெரும்பாலும் இதில் காயங்கள் ஏற்படுவது குறைவாக இருக்கும். புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது மூட்டு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி சிறந்த தேர்வாக இருக்கும்.
மிதமான வேகத்தில் நடப்பது கலோரிகளை கணிசமாக எரிக்கும். உதாரணமாக, வேகம் மற்றும் உடல் எடை போன்ற காரணிகளைப் பொறுத்து, 30 நிமிட விறுவிறுப்பான நடை 150-200 கலோரிகளை எரிக்க உதவும்.
நடைபயிற்சியில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
- நடைபயிற்சியின் போது நிமிர்ந்து நேராக நடக்க வேண்டும். குனிந்து கொண்டு நடப்பதால் காலப்போக்கில் முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
- சிலர் ஃபோனை பார்த்துக் கொண்டு நடப்பார்கள். இது உங்களுக்கு சரியான பலனை தராது.
- நடைபயிற்சி செல்பவர்கள் பொருத்தமான சப்பாத்து அணிவது முக்கியம். இல்லாவிட்டால் கொப்புளங்கள் அல்லது மூட்டு வலியை ஏற்படுத்தும்.
- வழுக்கும் அல்லது சீரற்ற தரையில் நடப்பதைத் தவிர்க்கவும், மோசமான பாதையில் சென்று பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
- மோசமான வானிலை இருக்கும் போது நடைபயிற்சி செல்வது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
- தடைகள் அல்லது சாலைகளின் விளிம்பிற்கு மிக அருகில் நடப்பதைத் தவிர்க்கவும். இது உங்களுக்கு விபத்துக்களை ஏற்படுத்தலாம்.
- நம்மில் சிலர் நடப்பதற்கு இடம் இல்லாமல் தெருக்களுக்கு அருகில் நடப்பார்கள். அப்போது போக்குவரத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2. ஜாகிங்
ஜாகிங் என்பது நடைபயிற்சியுடன் ஒப்பீட்டளவில் தீவிரமானது. இந்த பயிற்சி அதிகமான கலோரிகளை எரிக்கும். எடை இழப்பை வேகப்படுத்த நினைப்பவர்கள் இந்த பயிற்சியை செய்யலாம்.
மாறாக நீங்கள் ஜாகிங் செய்யும் போது, உடல் கடினமாக வேலை உழைக்கும். உங்களின் இதய துடிப்பு மற்றும் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். உதாரணமாக, 30 நிமிட ஜாக்கிங் 300-400 கலோரிகளை எரிக்கக்கூடும் இது நடைபயிற்சியுடன் ஒப்பிட்டயளவில் அதிகம்.
நடைபயிற்சி அல்லது ஜாகிங்?
1. எடை இழப்புக்கான உடற்பயிற்சியாக ஜாக்கிங் பார்க்கப்படுகின்றது. ஆனால் இதனை நிலையாக நாம் செய்ய முடியாது. ஜாக்கிங்கிலும் பார்க்க நடைபயிற்சி நிலையானது. ஜாக்கிங் செய்பவர்களுக்கு மூட்டு வலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நடைபயிற்சியில் விளைவுகள் குறைவு.
2. ஜாகிங் பயற்சி என்ன தான் பலனுள்ளதாக இருந்தாலும் உடல்நல பிரச்சனைகள் கொண்டவர்களுக்கு அதிக சோர்வை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவர்களுக்கு காயங்கள் கூட ஏற்படலாம்.
3. அதே நேரம் நடைப்பயிற்சியை அன்றாட நடவடிக்கைகளுடன் எளிதாக ஒருங்கிணைத்து செய்ய முடியும். தொடர்ந்து செய்து வருபவர்கள் படிக்கட்டுகள் ஏறலாம். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நடந்து செல்லலாம். உடற்பயிற்சிக்காக தனி நேரம் ஒதுக்காமல் நம்முடைய செயற்பாடுகளுடன் சேர்த்து கொள்ளலாம். இது காலையில் ஒரு வகையான சுறுசுறுப்பை கொடுக்கும்.
4. ஜாகிங் செல்பவர்கள் முறையான திட்டமிடல் மற்றும் தயாரிப்பு தேவைப்படலாம். உதாரணமாக சரியான காலணி, உரிய இடம், ஜாக்கிங் செல்வதற்கான ஏனைய வசதிகள் உள்ளிட்டவைகள் அவசியம் இருக்க வேண்டும். உடல் உழைப்புக்கு அதிக அர்ப்பணிப்பு நேரம் தேவை என பலரும் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |