Aval Laddu: வெறும் 10 நிமிடத்தில் அவல் லட்டு செய்வது எப்படி?
முன்னோர்களின் உணவான அவலில் சுவையான லட்டு வெறும் 10 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
அதிக சத்துக்களைக் கொண்ட உணவாக அவல் இருக்கின்றது. இதனை நம் முன்னோர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவதுண்டு.
தற்போதும் சில வீடுகளில் இந்த உணவுமுறை இன்றளவு இருந்து வருகின்றது. ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு அவல் போன்ற உணவுகள் சுத்தமாக தெரியாமல் போய்விடுகின்றது.
image: tarladalal
தேவையான பொருட்கள்
அவல் -1 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
முந்திரி - 6
திராட்சை - 6
ஏலக்காய்ப்பொடி - சிறிதளவு
பால் - அரை கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - சிறிதளவு
தேங்காய்துருவல் - 2 கப்
செய்முறை
அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
அகலமான பாத்திரம் ஒன்றினை எடுத்துக் கொண்டு, அவல் பொட்டுக்கடலை, ஏலக்காய் பொடி, பால், நெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
பின்பு இந்த கலவையுடன் வறுத்த முந்திரியையும் போட்டுக் கொள்ளவும். சிறு சிறு உருண்டையாக பிடித்துக் கொள்ளவும். முந்திரி வெளியே தெரிவது போன்று லட்டு பிடிக்கவும்.
இப்பொழுது குழந்தைகள் போட்டி போட்டு நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |