அலாரம் இல்லாமல் காலையில் எழும்பனுமா? இதோ அருமையான டிப்ஸ்
இரவில் நிம்மதியாக தூக்கத்திற்கு பின்பு காலையில் அலாரம் வைக்காமல் சுறுசுறுப்பாக எழுந்திருப்பதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே இரவில் தூங்க செல்லும் முன்பு காலையில் எழுந்திருப்பதற்கு அலாரம் வைத்துக் கொள்வதை பெரும்பாலான நபர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் சில தருணங்களில் அலாரம் அடித்தது கூட தெரியாமல் தூங்கிவிட்டு காலையில் பரபரப்பாக கிளம்பி செல்கின்றனர்.
சிலருக்கு எவ்வளவு தூங்கினாலும் உடல் அசதியாகவே இருப்பதால் காலைியல் எழும்புவதற்கு சிரமப்படுவார்கள். மனி ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிக முக்கியமாகும்
காலையில் அலாரம் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் நாளை துவங்க என்னென்ன விடயங்களை கடைபிடிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
உணவுகள்
நிம்மதியாக தூக்கத்தை பெற இரவில் பாதாம் சாப்பிடலாம். பாதாமை வறுத்து சாப்பிட்டு வருவதால் நன்றாக தூக்கம் வரும். இதில் உள்ள மெக்னீசியம், மனஅழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை குறைத்து, தூக்கத்தை கொடுக்கும்.
காலையில் எழுந்ததும் காய்கறி சூப் குடிப்பதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு ஏற்படும். இரவில் தூங்கி காலையில் விரைவாக எழுந்திருக்கும் திறனையும் ஏற்படுத்தும்.
இரவில் மஞ்சள் கலந்த பால் குடித்தால் விரைவில் தூக்கத்தை பெறலாம். சோம்பல் இல்லாமல் வேலை செய்வதுடன், இரவில் விரைவாக தூக்கத்தையும் கொடுக்கின்றது.
அதிகாலையில் ஏற்படும் சோம்பலை போக்க துளசி டீ உதவியாக இருக்கின்றது. இதில் ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது. பால் சேர்க்காமல் தண்ணீருடன் துளசி இலைகளை சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
உடற்பயிற்சி
இரவு தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு 30 நிமிடங்கள் எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தூக்கத்தை சமநிலைப்படுத்துகின்றது.
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்த்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை நடக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு வேலை உணவிற்கு பின்பும் 10 நிமிட சிறிய நடைபயிற்சி மேற்கொள்ளவும். உங்களை பகல்முழுவதும் சுறுசுறுப்பாக வைக்கவும், இரவில் விரைவாக தூக்கத்தையும் கொடுக்கும். இரவில் நிம்மதியான தூக்கத்தை தருவதால் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் தானாக விழித்து விட முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
