ஒரே ஒரு லொறியை வைத்து தொழில் தொடங்கியவர் .., இன்று அவரது கையில் பல ஆயிரம் கோடிகள்
கடனில் ஒரே ஒரு லொறியை வாங்கி தொழிலை ஆரம்பித்தவர் இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.
யார் இவர்?
கர்நாடக மாநிலம், தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சங்கரேஸ்வரர் (Vijay Sankeshwar). இவர், இளங்கலை காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.இவரது குடும்பம் ஒரு பப்ளிஷிங் கம்பெனியை நடத்தியது. ஆனால், இவருக்கு டிரான்ஸ்போர்ட் கம்பெனி மீது விருப்பம் இருந்தது.
இவரது விருப்பத்தை விஜய்யின் குடும்பத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், தனக்கென்று சொந்தத் தொழிலை செய்ய வேண்டும் என்று ஆசை இவரை விடவில்லை தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி தனக்கான தொழிலை தொடங்கினார்.
ஓய்வு பெறும் வயதில் தொழில் தொடங்கியவர்.. விடா முயற்சியால் ரூ.23,000 கோடி சொத்துக்கு அதிபதியான வயதான கோடீஸ்வரர்
கடன் வாங்கி அதன் மூலம் லொறியை வாங்கி 1976 -ம் ஆண்டில் தொழிலை தொடங்கினார். இவர் தனது டிரான்ஸ்போர்ட் தொழிலை விஜயானந்த் டிராவல்ஸ் என்ற பெயரில் தொடங்கினார். பின்னர் அதனை விஆர்எல் (VRL Group) லாஜிஸ்டிக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார்.
சந்தை மதிப்பு ரூ.6142 கோடி
ஒரே ஒரு லொறி மூலம் தொழில் தொடங்கிய இவருக்கு தற்போது 5700 வாகனங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான லாரிகள், மினி லாரிகள், மினி டிரக்குகள் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ளன.
முன்னணி நிறுவனங்களான டிவிஎஸ், ஏபிடி ஆகியவற்றுடன் சரியாகப் போட்டி போட்டு ஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் முன்னிலைக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சரக்கு போக்குவரத்தில் இந்நிறுவனம் உருவெடுத்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சங்கேஷ்வரின் நிறுவனம் 115 % லாபத்தை பங்குச் சந்தைக்கு அளித்தது. விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.6142 கோடி ஆகும். தற்போது இந்தியாவின் பணக்காரர்களில் விஜய் சங்கரேஸ்வரர் (Vijay Sankeshwar) ஒருவராக உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |