முதலமைச்சருக்கு பிறந்த நாள் பரிசு கொடுத்த தொண்டர்கள்: என்ன கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா?
இன்று பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதலமைச்சருக்கு அவரது தொண்டர்கள் யாரும் கொடுக்காத பரிசொன்றைக் கொடுத்திருக்கிறார்.
முதல்வரின் பிறந்தநாள்
தி.முக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 70ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருக்கிறார்.
இவர் தனது பிறந்தநாளை யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொண்டார். இவரின் பிறந்த நாளுக்கு பல கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவர் பிறந்தநாள் குறித்து நேற்றையதினம் டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார் அதில், ஆடம்பரம் தவிர்த்து, எளியோர்க்கு உதவிகள் வழங்கி எனது 70வது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டிருந்தார்.
பிறந்தநாள் பரிசு
முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக சென்னை அண்ணா அறிவாலத்தில் வாழ்த்துக் கூறுவதற்காகவே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போதும் பலரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு பரிசில்கள் வழங்கிச் சென்ற வேளையில் திமுக தொண்டர் ஜாகிர்ஷா, பிறந்தநாள் பரிசாக வழங்குவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 2 வயது ஒட்டகத்துடன் வந்துள்ளார்.
இவர் இதற்கு முன்னரும் ஆடு, மாடு என வித்தியாசமாகத்தான் பிறந்தநாள் பரிசு வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.