தொகுப்பாளினி பிரியங்காவின் வளைகாப்பு... வைரலாகும் புகைப்படம்
தொகுப்பாளினி பிரியங்கா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வளைகாப்பு விழாவின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல தொகுப்பாளினியாக வலம்வரும் பிரியங்கா தனது கலகலப்பான பேச்சினாலும், நகைச்சுவையினாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தினை பெற்றுள்ளார்.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் என பல முன்னணி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியதுடன், பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலமாகவும் பிரபலமானார்.

இவர் கடந்த வருடம் வசி என்பவரை திருமணம் செய்த பிரியங்கா, சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் செய்தியினை சமூக வலைத்தளங்களில் அறிவித்தார்.
இரண்டு பேராக இருக்கும் எங்களது குடும்பத்தில் விரைவில் மூன்றாவது உறுப்பினர் இணையப் போகிறார் என்று வெளியிட்ட அறிவிப்பு இணையத்தில் பெரும் கவனத்தினை ஈர்த்தது.

எளிமையாக நடந்த வளைகாப்பு
இந்நிலையில் பிரியங்காவின் வளைகாப்பு எளிமையான முறையில் நடைபெற்றுள்ள புகைப்படத்தினை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
வளைகாப்பில் தனது தம்பி மற்றும் தம்பி மனைவி,அம்மா மற்றும் கணவர் வசி என்று கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படத்தினை பிரியங்கா வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |