காதலர் கம்ரூதினுடன் திருமணம் எப்போது? பிக்பாஸ் பார்வதியின் ஓபன் டாக்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான விஜே பார்வதி கம்ரூதினுடன் தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.
விஜே பார்வதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் விஜே பார்வதி. இந்நிகழ்ச்சியில் சக போட்டியாளராக இருந்த கம்ரூதினை பிக்பாஸ் வீட்டிலிருந்து காதலித்து வந்தார்.
ஆனால் அப்பொழுது இவர்களின் காதலை பிக்பாஸிற்காக நடித்து வருவதாக கூறினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பார்வதி, கம்ரூதின் இருவரும் ரெட் கார்டு வாங்கிக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட்டு வெளியேறினார்.

பின்பு இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகவே சென்று வருவதுடன், ரசிகர்களிடையே பிரபலமாகியும் வருகின்றனர். விஜே பாரு நடித்த நூறு கோடி வானவில் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பார்வதி சினிஉலகம் சேனலுக்கு பேட்டி ஒன்றினைக் கொடுத்துள்ளார். குறித்த பேட்டியில் தனது திருமணம், கம்ரூதினுடன் படத்தில் நடிப்பேனா?, தற்போது தான் செய்து வரும் படங்கள் என அனைத்தையும் குறித்து கூறியுள்ளார்.

இருவரும் சினிமாவில் பிரபலமான பின்பு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், தற்போது ஒன்றாக சென்றால் திருமணத்திற்கு முன்பே இப்படி ஒன்றாக சுற்றுகிறார்கள்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருவதாகவும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |