மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொகுப்பாளினி மணிமேகலை! கணவர் வெளியிட்ட புகைப்படம்
தொகுப்பாளினி மணிமேகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தினை அவரது கணவர் வெளியிட்டுள்ளார்.
தொகுப்பாளினி மணிமேகலை
பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக வலம் வந்த மணிமேகலைக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஹுசைன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர்களின் திருமணத்தினை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்துவரும் நிலையில், காதலனுக்காக மணிமேகலை மதம் மாறவும் செய்தார்.

வீட்டைவிட்டு வெளியேறிய இந்த ஜோடிகளின் திருமணம் நண்பர்களால் நடைபெற்றது. பின்பு தங்களது வேலையில் கவனம் செலுத்தி, வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர்.
அவ்வப்போது ரம்ஜான், தீபாவளி எந்த பண்டிகையாக இருந்தாலும் மதம் பார்க்காமல் கொண்டாடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் மணிமேகலை
ஆடம்பரமாக வீடு ஒன்றினை சொந்தமாக வாங்கி வாழ்ந்துவரும் நிலையில், மணிமேகலையின் கணவர் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதிக காய்ச்சல் காரணமாக மணிமேகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சூழ்நிலையிலும் தனது ஜனநாயக கடமையை செய்வதற்கு வாக்குசாவடி வந்து வாக்களித்துள்ளார்.
இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மணிமேகலையிடம் ரசிகர்கள் இப்போ எப்படியிருக்கீங்க என்று கேள்விஎழுப்பியுள்ளார். அதற்கு மணிமேகலை தற்போது பரவாயில்லை ஆனால் மருந்து எடுத்துக் கொண்டிருப்பதாக பதில் அளித்துள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |