vj மணிமேகலை 2000 சதுர அடியில் வாங்கிய பிரிமியம் அபார்ட்மெண்ட்... வைரலாகும் home Tour!
vj மணிமேகலை - ஹுசைன் தம்பதியினர் சென்னையில் 2000 சதுர அடியில் வாங்கிய பிரிமியம் அபார்ட்மெண்ட்டின் home Tour காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
vj மணிமேகலை
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களுள் ஒருவர் தான் மணிமேகலை.
சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.
பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு தாவிய இவர் மேலும் பிரபல்யம் அடைந்தார். கடந்து 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களுடைய திருமணம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. அதைடியெல்லாம் கடந்த தனது காதல் கணவருடன் மகிழ்சியாக வாழ்ந்து வருகின்றார்.
சில மாதங்களுகடகு முன்னர் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சயில் பிரியங்கா உடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியது இணையத்தில் புயலை கிளப்பியது.
ஆனால் கடினமான நிலைகளையும் பக்குவமாக கடந்து, தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், மணிமேகலை - ஹுசைன் தம்பதியினர் சென்னையில் 2000 சதுர அடியில் வாங்கிய பிரிமியம் அபார்ட்மெண்ட்டின் home Tour வீடியோவை தனது Youtube சேனலில் பதிவு செய்துள்ளனர். குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. இந்த காணொளியை முழுமையாக காண இங்கே கிளிக் செய்யவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |