பணமூட்டையுடன் சென்ற போட்டியாளரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் வீட்டிலிருந்து நேற்றையதினம் வெளியேறிய கதிர், எவ்வளவு சம்பளம் பெற்று சென்றுள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் சீசன் 6 தற்போது நிறைவுக்காலத்தை எட்டியுள்ளது என்பதால் போட்டிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சீசன்களை விட டாஸ்க்களும் அதிகமாகவே வித்தியாசமாக தரப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முக்கிய போட்டியாளர்களாக இருந்து சிவன், விக்ரமன், அசீம், அமுதவானண், மைனா, கதிரவன் ஆகியேர் தெரிவாகிச் சென்றார்கள்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் அதிக பயத்திலிருந்த கதிரவன் பணமூட்டையுடன் வெளியேறினார். இவர் ஆரம்பத்திலிருந்து பிக் பாஸ் வீட்டில் பங்களிப்பு குறைவாக தான் காணப்பட்டது.
ஆனாலும் இவருக்கான ஆதரவு காணப்பட்டது. மேலும் இவருக்கு ஒரு ஹர்மி உருவாக்கியுள்ளார்கள். இதனை தொடர்ந்து வெளியேறிய போட்டியாளர்கள் வீட்டிக்குள் வந்தவுடன் இவரிடம் நடந்துக் கொண்ட விதம் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் ஏடிகே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
கதிர் வாங்கிய சம்பளம்
இந்நிலையில் சுமார் 100 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டிலிருந்த கதிருக்கு ஒரு நாளுக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் சம்பளமாக 20 இலட்சம் மற்றும் மூட்டையிலிருந்த 3 இலட்சம் ரூபாய் மொத்தமாக 23 இவட்சம் ரூபாயை கைப்பற்றி சென்றுள்ளார்.
இவர் ஒரு பணக்கார வீட்டு பையன் என்பதால் இவருக்கான சம்பளம் ஒரு பெரிய தொகையாக இருக்காது என போட்டியாளர்கள் கலாய்த்துள்ளார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒன்னுமே பண்ணாமல் இலட்சாதிபதியாக மாறிவிட்டிர்கள் என கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.