இலங்கையை சார்ந்த சீரியல் நடிகைக்கு Engagement- குவியும் வாழ்த்துக்கள்
நீ நான் காதல் சீரியல் நடிகைக்கு எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.
சீரியல் நடிகர்களின் திருமணம்
சமீபக் காலமாக பல நடிகைகள், நடிகர்கள் திடீர் திருமணத்தை அறிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று முன்தினம் தான் சீரியல் நடிகர் வெற்றி வசந்த்- வைஷ்ணவி தம்பதிகளுக்கு பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. வெற்றி வசந்த்- வைஷ்ணவி இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தங்களுடைய காதலை தெரிவித்திருந்தனர்.
வழக்கமாக ஒரே சீரியலில் நடிக்கும் நடிகர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் வேற வேற சீரியல்களில் நடித்த வெற்றி வசந்த்- வைஷ்ணவி இருவரும் காதலை அறிவித்ததும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ஏனெனின் பொன்னி சீரியலில் வைஷ்ணவி நடித்துவரும் நிலையில் அவருக்கு அண்ணனாக இரண்டு மாதங்களுக்கு முன்பு வெற்றி வசந்த் நடித்திருந்தார்.
அவர்கள் காதலை அறிவித்ததும் இது உண்மையா? அல்லது பொய்யா? என்று கூட கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இந்த ஜோடி காதலை அறிவித்த அடுத்த இரண்டு மாதத்திற்குள் திருமணத்தையும் அறிவித்து தற்போது தம்பதிகளாகி விட்டனர்.
எளிமையாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்
இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சியில் டி ஆர் பி யில் முன்னணி இடத்தை பெற்று வரும் ”நீ நான் காதல்” சீரியலில் கதாநாயகனின் அக்காவாக நடித்துவரும் விஜே தனுஷிக் இலங்கையை சார்ந்தவர். இவர், விஜேவாக தன்னுடைய பணியை ஆரம்பித்து தற்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.
இப்படியொரு சமயத்தில், “அன்பே வா” சீரியலில் ஜோதி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த சின்ன வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தற்போது “நீ நான் காதல்” சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் கார்த்திகை தீபம் சீரியலிலும் நடித்து வருகிறார்.
இவருக்கு கடந்த 27 ஆம் தேதி மணி என்பவரோடு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
