தாயிடம் கடைசியாக பேச நினைத்த சித்ரா! பேசவிடாமல் தடுத்து ஹேமந்த் செய்த கொடுமை
சித்ராவின் 30 சவரன் நகைகளை காணவில்லை. என்னை கடை வீதியில் நாக்கை கடிச்சிகிட்டு ஒருவன் மிரட்டினான் என அவரது தாய் பரபரப்பு தகவலை அளித்தார்.
இதுகுறித்து சித்ராவின் தாய் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சித்ராவின் மரணம் குறித்து நாங்கள் பேசி பேசி அலுத்துவிட்டோம். ஏழையின் சொல் மேடை ஏறாது என்பார்களே. அது போல் ஆகிவிட்டது. ஆனால் ஹேமந்த் இத்தனை நாள் விட்டுவிட்டு இன்று ஏன் சொல்கிறார் என தெரியவில்லை.
சித்ராவின் மரணத்திற்கு முன்னாள் எம்எல்ஏ, மாஜி அமைச்சருக்கெல்லாம் தொடர்புண்டு என்கிறாரே. இதை சித்ரா இறந்த போதே சொல்லியிருந்தால் எங்கள் இரு குடும்பமும் சேர்ந்து போய் புகார் கொடுத்திருக்கலாமே. அதை ஏன் செய்யவில்லை.
காணாமல் போன நகை
ஹேமந்தின் நண்பர் இம்மானுவேல் காண்பித்த போதுதான் தெரியும். அங்கிருந்த இரு காலி நகை பெட்டிகள் சித்ராவுடையது. ஆனால் அதிலிருந்த நகைகளை காணவில்லை. இதை பார்த்தவுடன் யாரிடம் புகார் செய்வது என தெரியாமல் விழித்தோம். அதில் ஒரு நகை 10 சவரன், இன்னொரு நகை 20 சவரன் (போனில் இருந்த போட்டோவில் காண்பிக்கிறார்).
கஞ்சா, ஆணுறைகள் எல்லாம் இருந்தது எங்கள் வீட்டில் இல்லை. அது ஹேமந்தின் வீட்டில்! எனவே அந்த பொருட்களுக்கும் சித்ராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஹேமந்தின் அப்பாவும் அம்மாவும் கேட்டுக் கொண்டதால் சித்ராவை அவர்கள் வீட்டில் தங்க அனுமதித்தோம். ஆனால் அங்கு தங்காமல் ஹோட்டலில் ஏன் தங்கினார்கள் என தெரியவில்லை.
நெய் உடம்பிற்கு நல்லது தான்! எவ்வளவு சாப்பிடனும் தெரியுமா? இவங்க மட்டும் சாப்பிடக்கூடாதாம்
கடைசியாக பேச நினைத்த சித்ரா
ஜாதகத்திலேயே ஹேமந்த் மிகவும் கோபக்காரன் என சொல்லியுள்ளார்கள். கடந்த 2020 ஆம் ஆண்டு 7ஆம் தேதி சித்ரா எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் முகமே சரியில்லை, என்னம்மா என கேட்டேன். அவர் ஒன்றுமில்லை என்றார். மீண்டும் மீண்டும் கேட்டேன். ஆனால் ஹேமந்த் எங்களுடன் அவளை பேச விடாமல் அழைத்து சென்றார்.
சித்ரா ஷூட்டிங் முடித்துக் கொண்டு காரை தனியாகவே ஓட்டி வருவார். அவர் குடித்துவிட்டு வந்ததாக ஏதேனும் கேஸ் இருக்கிறதா? நான் கடைக்கு போய்விட்டு வீட்டுக்கு வரும் போது யாரோ ஒருவன் பைக்கில் சென்று கொண்டிருந்தான். அவர் என்னை பார்த்து நாக்கை கடிச்சிகிட்டு ஆள்காட்டி விரலை கைகளை ஆட்டி மிரட்டினான். பிறகு போலீஸில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீஸார் வந்து விசாரித்துவிட்டு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார் சித்ராவின் தாய்.