ஹேம்நாத்தால் கர்ப்பமான பெண்.. சித்ராவின் மரணத்துக்கு பீதியை கிளப்பும் நடிகை!
சீரியல் நடிகை விஜே சித்ரா தற்கொலை செய்துகொண்ட ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
கணவர் ஹேம்நாத் தான் காரணம் என அவரை கைது செய்து இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பின்னர், ஜாமீனில் வெளிவந்த ஹேம்நாத், தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கேட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
திருமண தேதியை வெளியிட்ட நயன்தாரா... எங்கு திருமணம் செய்யப் போகிறார் தெரியுமா?
பரபரப்பை கிளப்பும் நடிகை
இந்நிலையில், சித்ராவின் தோழியான சீரியல் நடிகை ரேகா நாயர் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில், சித்ராவும், ஹேம் நாத்தும் தங்கியிருந்த வீட்டில் அவ்ளோ காண்டத்தை வீட்டில் வைத்திருந்துள்ளார்கள்.
கணவன் மனைவி ஏன் அவ்வளவு வைத்திருக்க வேண்டும் என கேட்டுள்ளார். மேலும், சித்ரா மாஜி எம் எல் ஏவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், சித்ரா தண்ணி அடிப்பா, கெட்ட பழக்கங்கள் இருந்தது, அதனால் தான் அவசரமாக திருமணம் செய்ய காரணம் எனக்கூறியுள்ளார்.
பிரேத பரிசோதனை முழுவதுமாக செய்திருந்தால், அனைத்தும் தெரிந்திருக்கும் என தெரிவித்தார். பின், நல்லவன் போல் காட்டிக்கொள்ள தற்போது பொய்யான குற்றச்சாட்டுகளை ஹேம்நாத் கூறி வருகிறான்.
கமிஷனர் ஆபிஸில் சித்ரா ஹேண்ட் பேக்கில் இருந்த கஞ்சா, ஹேண்ட் பேக், போன்ற அனைத்தும் உன் மனைவியுடையதுதானே என்று கேட்டபோது எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளான்.
சித்ரா மட்டுமின்றி பல பெண்களுடன் தொடர்பில் இருந்த அவனது புகைப்படங்கள் எல்லாம் தன்னிடம் உள்ளது எனக்கூறியுள்ளார்.
பெண்ணை கர்ப்பமாக்கிய ஹேம்நாத்
இதுமட்டுமின்றி, ஹேம்நாத்தால், கர்ப்பமாகி அபார்ஷன் செய்த பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி காலில் விழுந்து அழுதும் அவன் மறுத்து இருக்கிறான்.
அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் பலரது பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விடுவான் என தெரிவித்துள்ளார்.