இந்த தேதியில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணமாம்.. எங்கு செய்யப் போகிறார் தெரியுமா?
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனைக் காதலித்து வரும் நிலையில் இவர்களது திருமண திகதியை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா
கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா, கடந்த 2004-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
சுமார் 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் சில தோல்விகளை சந்தித்த இவர் தற்போது விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகின்றார்.
பாதாம் பால் யாரெல்லாம் குடிக்கக்கூடாது? ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?
நயன்தாரா அறிவித்த திருமண தேதி
கடந்தாண்டு உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி திருப்பதி கோவிலில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமண ஏற்படுகளை பார்வையிட்டதாக கூறப்படுகிறது.