தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டில் சோகம்.. கடும் துயரில் குடும்பத்தினர்!
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டில் சோகம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
வி.ஜே அர்ச்சனா
தன்னுடைய தனி திறமையை மாத்திரம் வைத்து மீடியாத்துறையில் சாதித்தவர் தான் வி.ஜே அர்ச்சனா.
இவர் ஆரம்ப காலங்களில் விஜய் தொலைக்காட்சியில் இருந்தார். ஆனால் எந்த காரணத்தினால் என சரியாக தெரியவில்லை. தற்போது ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்.
வி.ஜே அர்ச்சனாவை செல்லமாக பலரும் 'அச்சு மா' என அழைப்பார்கள். சுமார் 7 ஆண்டுகள் காமெடி டைம், இளமை புதுமை ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் 2008ம் ஆண்டு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றினார்.
இதனை தொடர்ந்து தற்போது சரிகமப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
சோகமான செய்தி
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வி.ஜே அர்ச்சனா சோகமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது அர்ச்சனாவின் தாயார் நேற்றைய தினம் அவரின் வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இதனை தனது அப்பாவுடன் அம்மா எடுத்த பழைய புகைப்படத்தை பகிர்ந்து அர்ச்சனா வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தி சின்னத்திரை ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், ஆறுதலையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |