பாத்ரூம் டூர் சர்ச்சை! கொந்தளிக்கும் யூடியூப்பர்ஸ்.. அலட்டி கொள்ளாமல் பதிலடி கொடுக்கும் அர்ச்சனா!
கடந்த நாட்களுக்கு முன்பு விஜே அர்ச்சனா வாவ் லைஃப் என்ற யூடியூப் சேனைலை சில மாதங்களுக்கு முன் தொடங்கினார்.
அதில், தனது வீட்டின் ஒவ்வொரு அறையின் தோற்றத்தையும், வடிவமைப்பையும், அதில் இடம்பெற்றுள்ள பொருள்கள் என அனைத்தையும் தனித்தனியான வீடியோ மூலமாக ரசிகர்களுக்கு காண்பித்து வந்தார்.
அப்படி, கடந்த நாட்களுக்கு முன்பு பாத்ரூம் டூர் என்ற தலைப்புடன் தனது வீட்டின் கழிப்பறையையும் வீடியோவாக பதிவிட்டார்.
அந்த வீடியோவில், மகள் சாராவுடன் தங்கள் வீட்டின் கழிப்பறையில் சுகாதாரம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை விளக்கினார். மேலும் ஒரு படி மேலே சென்று பாத்ரூம் ஆடம்பரம் உச்சமாகவே இருந்தது அவரின் பாத்ரூம் வீடியோ..
ஒரு பாத்ரூமில் இவ்வளவு அம்சங்கள் தேவைதானா என பார்ப்பவர்களை முகம் சுழிக்கவே செய்தது. மேலும் இவர் பதிவிட்ட இந்த வீடியோவுக்கு, யூடியூப்பில் ட்ரெண்டிங்க் இடத்திற்கே சென்றது.
இதனால், வீடியோவை கண்ட பார்வையாளர்கள் மட்டுமின்றி நெட்டிசன்களும் கொந்தளித்தும், நக்கலாகவும் பல ட்ரோல் வீடியோவை வெளியிட தொடங்கினர்.
இதையெல்லாம் கண்ட அர்ச்சனா யூடியூப் நிறுவனத்திடம் எனது பாத்ரூம் டூர் வீடியோவை பற்றி பேசியவர்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டவர்கள் மீது copy rights - புகாரை பதிவு செய்து வீடியோவை தூக்கினார்.
மேலும், இந்த வீடியோவை கண்ட பிரபல யூடுயூபரான பிரியாணி மேன் இந்த வீடியோவை கலாய்த்து இருந்தார். இது போன்ற கேவலான கன்டன்டால் யூடுயூபர்கள் பாதிக்கப்படுவதாக கூறி இருந்தார்.
ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அர்ச்சனா அவர்களுக்கு வீடியோ நாங்கள் தான் ட்ரெண்டிங்கில் நம்பர் 1, மில்லயன் வியூஸ் பெற்றுட்டோம். உங்கள் அன்பிற்கு நன்றி. என்று பதிவிட்டு #podadai என்ற ஹேஷ் டேக்கையும் போட்டு பதிலடி கொடுத்தார்.
மேலும், லைவ் வீடியோவில் பேசிய இவர், நான் அனைத்து சமூக வலைத்தளங்களில் என பங்களிப்பை கொடுக்க நினைக்கிறேன்.
ஏற்கனவே பிக்பாஸில் என 17 வருட உழைப்புக்கு அவ பெயர் வந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. என்னையும் என் பொண்ணையும் கேவலமாக திட்டி வீடியோ போட்டார்கள் அதற்கு தான் காப்பி ரைட்ஸ் கொடுத்தேன்.
நான் எனக்கு பிடித்ததை செய்வேன் என பேசியுள்ளார்.
இதனால், நெட்டிசன்கள் மட்டுமின்றி பலரும் அர்ச்சனா செய்யும் இந்த செயலுக்கு ஆதங்கத்தை கூறி வருவதோடு, கஷ்டப்பட்டு வரும் யூடியூப் சேனல்களும் பாதிக்கப்படுவதாக கூறி வருகின்றனர்...