மறைந்த தொகுப்பாளரின் கடைசி பதிவு: கண்ணீருடன் ரசிகர்கள் பதிவிட்ட கருத்து
தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் விஜேவான ஆனந்த கண்ணன் இவரது மறைவிற்கு பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சில படங்களில் நடித்து தனது திறமைகளை வெளிக்காட்டிய இவர், பின்பு படங்கள் எதுவும் நடிக்காமல் 5 வருடமாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இவரது இன்ஸ்டாகிராமில் இவர் கடைசியாக பதிவிட்ட புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.
தமிழரின் பாரம்பரிய நிகழ்வான துடிப்பாட்டத்தினை மையமாக வைத்து டாக்குமண்ட்ரி எடுக்கவிருந்த நிலையில், அதின் போஸ்டர் புகைப்படத்தினையே வெளியிட்டுள்ளார்.
இதனை தற்போதும் அவதானித்த ரசிகர்கள் மிகவும் கலக்கத்துடன் காணப்படுவதுடன், தங்களது கண்ணீர் நிறைந்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.