ஆங்கிலம் தெரியாமல் அசிங்கப்பட்ட காமெடி நடிகர்! அடுத்த நொடியே விவேக் செய்த உதவி.... பல முறை கண்ணீர் சிந்த வைத்த காட்சி
நகைச்சுவை நடிகர் சதீஷ், நடிகர் விவேக், மயில்சாமி, செல் முருகன் உள்ளிட்டோர் பங்குபெறும் ஒரு படப்பிடிப்பு காட்சியை வீடியோ எடுத்து தன்னுடைய வலைப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் நடிகர் மயில்சாமி இன்ஸ்பெக்சன் என்கிற வசனத்தை சொல்வதற்கு சிரமப்பட, விவேக் அதற்கு உதவி செய்கிறார்.
எனினும் இறுதியில் அந்த வசனத்தை டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள்.
இந்த வீடியோவை எடுப்பதை பார்த்து வீடியோ எடுக்கிறீர்களா? என்று விவேக் எதார்த்தமாக கேட்கிறார்.
இந்த கலகலப்பான வீடியோவை, விவேக்கை பார்க்கும் போதெல்லாம் இதைச் சொல்லி சிரித்ததாகவும் இந்த முறை இந்த வீடியோவை பார்க்கும் போது அழுகை வருவதாகவும் நடிகர் சதீஷ் தமது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.