மூளை சுறுசுறுப்பிற்கு இந்த சத்து தேவை.. வைட்டமின் பி12ல் இவ்வளவு நன்மைகளா?
பொதுவாக உடல் சீராக இயங்கவும், நோய்களில் இருந்து காக்கவும் வைட்டமின்கள் அவசியம்.
அந்த வகையில் ஆரோக்கியமான உடலுக்கு பல்வேறு வகையான வைட்டமின்கள் தேவைப்பட்டாலும், அதில் வைட்டமின் பி12 இன்றியமையாததாக பார்க்கப்படுகின்றது.
இந்த வைட்டமின் அடிப்படையான கட்டமைப்பான டிஎன்ஏவை பராமரிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எனவே, இயற்கையான முறையில் வைட்டமின் பி12ஐ போதுமான அளவு உட்கொள்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
இரத்த சோகை
மனித உடலில் இரத்த ஓட்டத்தின் இயக்கம் சீராக இருக்க வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. பி12 உடலில் இல்லாத போது, அது சாதாரண இரத்த சிவப்பணுக்களின் தொகுப்பைக் குறைக்கிறது. இதனால் “ இரத்த சோகை” நோய் ஏற்படுகிறது.
இது இரத்தத்தில் ஆக்ஸிஜன் சென்று சேர்வதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.
வைட்டமின் பி12 நன்மைகள்
1. மூளை மற்றும் நரம்பு மண்டலம் சீராக செயற்பட வைக்கின்றது.
2. உடலின் பிறவிக் குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
3. டிஎன்ஏ உருவாக்கம் மற்றும் ஒழுங்குமுறைக்கு உதவுகிறது.
4. மாகுலர் சிதைவிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
5. தெளிவாக சிந்திக்கும் ஆற்றலை மனிதர்களுக்கு கொடுக்கின்றது.
வைட்டமின் பி12 உள்ள காய்கறிகள்
1. பீட்ரூட்டில் பி12, தாதுக்கள், கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இதனால் உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது.
2. உருளைக்கிழங்கில் பொட்டாசியம், உப்பு மற்றும் வைட்டமின்கள் பி12, ஏ மற்றும் டி உள்ளது. அத்துடன் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் அதிகமாக உள்ளன.
3. ஸ்குவாஷில் (பட்டர்நட்) தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். இவற்றை தாண்டி அதிக அளவு வைட்டமின் பி12 உள்ளது.
4. காளான் ஒரு வகை பூஞ்சை உணவாக பார்க்கப்படுகின்றது. இதில் வைட்டமின் பி12, இயற்கையான வைட்டமின் டி, புரதம், கால்சியம் மற்றும் தாமிரம், நியாசின், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |