கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா?
ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள், 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில், இன்னும் சில நாட்களில் நாம் நவம்பர் மாதத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளோம். இந்த மாதத்தில் குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளதுடன், செவ்வாய், சூரியன், புதன், சுக்கிரன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் நிகழவுள்ளன.

குறிப்பாக, நவம்பர் மாதம் முழுவதும் குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். அதேவேளை, நவம்பர் 16ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்கு இடம்பெயர்வார். புதன் துலாம் ராசியிலும், சனி மீன ராசியிலும் சஞ்சரிப்பார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறான கிரக நிலை மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.

அந்த வகையில், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்களை வழங்கக்கூடிய காலமாக அமையலாம். குறிப்பாக, நான்கு ராசிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதம் அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி நவம்பர் மாதத்தம் முழுவதும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் முடிவெடுக்கும் திறனும் மேம்படும்.
பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம். நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்கள் வாழ்க்கைத் துணையைச் சந்திப்பார்கள்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மங்களகரமாக அமையும். நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் திறமைக்குப் பாராட்டு கிடைப்பதுடன், உயர் அதிகாரிகளுடனான உறவும் வலுவடையும்.
புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். பயணங்களாலும் ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.குறிப்பான நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பான பலன்களைத் தரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிக்கலாம்.
நீண்ட நாட்களாகக் கிடைக்காமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். திடீர் பண வரவு கிடைக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் வெற்றிகரமாக அமையும். எடுத்துக்கொண்ட வேலைகளில் வெற்றி கிடைப்பதுடன், செல்வமும் பெருகும். நீதிமன்றப் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம்.
தன்னம்பிக்கையும் ஆற்றலும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். பணவரலு திருப்திகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |