அடுத்த அப்பத்தாவாக உருவெடுக்கும் முக்கிய பிரபலம்.. ப்ரோமோவில் சிக்கிய காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய தினம் வெளியாகிய ப்ரோமோவில் விஜய் பட பிரபலத்தின் நடிப்பை காணக் கூடியதாய் உள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் இயக்குனர் திருசெல்வம் இயக்கத்தில்ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் எண்ணற்ற சினிமா நடிகர்கள் நடித்து வருகிறார்கள். சீரியலை பொருத்தவரையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் இருக்கின்றது.
மாரிமுத்து இறப்பிற்கு பின்னர் சீரியல் எப்படி ஓடும் என எதிர்பார்த்த வேளையில், இன்று நடிகர் வேலராமமூர்த்தி நடிப்பில் இழந்த இடத்தை மீண்டும் பெற்றுள்ளது.
கதையின் படி குணசேகரனை ஆட்டி வைக்கும் ஓரே கதாபாத்திரம் அப்பத்தா தான். மாரிமுத்து மறைவின் பின்னர் அப்பத்தா இறந்தது போல் காட்டி நடிகை பாம்பே ஞானம் சீரியலிலிருந்து சென்றுள்ளார்.
இதன் பின்னர் சில பல மாற்றங்களினால் சீரியல் டிஆர்பி மீண்டும் பின்னடைவு சந்தித்தது.
இப்படியொரு நிலையில் இழந்த இடத்தை மீண்டும் பிடிப்பதற்காக பழம்பெரும் நடிகை டி.கே.கலாவை ஜனனியின் அப்பத்தா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
அடுத்த அப்பத்தா யார் தெரியுமா?
இந்த நிலையில் இன்றைய தினம் ஜனனியின் நிறுவனத்திற்குள் வந்து நாச்சியப்பன் குடும்பத்தினர் பூஜை போடுகிறார்கள்.
அப்போது ஒரு வயதானாவர் ஓரமாக அமர்ந்திருக்கிறார்.
பாம்பே ஞானம் நடித்து வந்த பட்டம்மாள் கதாபாத்திரம் இறப்பது போல காட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து எதிர்நீச்சல் கதாபாத்திரத்தில் டி.கே.கலாவின் என்ட்ரி கொடுப்பது சேனலின் டிஆர்பியை உயர்த்தும் எனவும் நம்பப்படுகிறது.
இவர் கில்லி படத்தில் பிரகாஷ் ராஜுக்கும் குருவி படத்தில் விஜய்க்கும் அம்மாவாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |