மூளையை பாதிக்கும் வைட்டமின் B1(Vitamin B1) குறைபாடு: எந்தெந்த உணவுகளில் கவனம் தேவை
பொதுவாகவே நாம் உயிர்வாழ்வதற்கு காரணம் நாம் உண்ணும் உணவும், அதிலுள்ள ஊட்டச்சத்துக்களும்.
எனவே ஊட்டச்சத்துக்கள் குறித்து தெரிந்துக்கொள்வதன் மூலம் அதன் குறைபாடு ஏற்படாத வகையில் நமது தினசரி உணவு பழக்கவழக்கத்தை மாற்றியமைக்க முடியும்.
அந்த வகையில் நம்மை உயிருடன் வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்துக்களில் மிக முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் பி 1 ஆகும்.
இருப்பினும் நம் உடலால் இந்த வைட்டமின் பி-1 ஐ உற்பத்தி செய்ய முடியாது. அதன் பயன்பாடுகள் குறித்தும் வைட்டமின் பி1 அதிகம் நிறைந்துள்ள உணவுகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
வைட்டமின் பி 1 உணவை ஆற்றலாக மாற்றவும், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
குறிப்பாக உயிரணுக்களுக்குள் ஆற்றலை கொண்டு செல்வது இதன் முக்கிய தொழிற்பாடாக காணப்படுகின்றது.
அதுமட்டுமின்றி, இது நீரில் கரையக் கூடிய ஊட்டச்சத்து. அதனால் இதனை உடல் விரைவில் உறிஞ்சிவிடும்.
நரம்பியல் செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் பி 1 உங்கள் உடலில் அசிடைல்கோலின் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்ய துணைப்புரிகின்றது. இது ஒரு அத்தியாவசிய கனிமமாகும். இது ஒரு நரம்பியல் கடத்தியாக செயல்படுகிறது.
உங்கள் தசைகளுக்கும், மூளைக்கும் இடையே செய்திகளை திறம்பட பரிமாறச் செய்ய வைட்டமின் பி 1 உதவுகிறது.
இது உங்கள் மூட்டுகள் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் சிறந்த நரம்பியல் கட்டுப்பாட்டை வைத்திருக்க உதவுகிறது.
வைட்டமின் பி 1 போதுமான அளவில் இருப்பது உங்கள் இதய தசைகளை எல்லா நேரத்திலும் சிறப்பாக இயங்க வைக்கின்றது.
இது, தடையற்ற இதய செயல்பாட்டைக் குறிக்கிறது. மேலும், உங்கள் இதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் பி 1 மிகவும் முக்கியம். வைட்டமின் பி 1 குறைபாடு இருப்பது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் சோம்பலுக்கு வழி வகுக்கும்.
வைட்டமின் பி 1 ஊட்டச்சத்து பற்றிய ஆராய்ச்சியில், வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதிகப்படியான ஆக்சிஜனேற்றத்தால் நம் உடலுக்குள் இருக்கும் ப்ரீ ரேடிக்கல்கள் அகற்றப்படும். இதில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
இது உடலில் போதுமான அளவில் இருக்கும் போது அவை வயதான அறிகுறிகளுக்கு எதிராக போராட உதவும். எப்போதும் இளமையாக இருக்க நினைப்பவர்களுக்கு இது இன்றியமையாத ஊட்டச்சத்தாக இருக்கின்றது.
பச்சை பட்டாணி, ஆரஞ்சு, வாழைப்பழம், நட்ஸ் வகைகள், முழு தானிய ரொட்டி, ஈரல் போன்றவற்றில் வைட்டமின் பி 1 நிறைந்துள்ளது.
மேலும், இந்த வைட்டமின் குறைபாடு புற நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு, மன ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயற்பாடுகளையும் கூட பாதிக்ககூடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |