எப்பொழுதுமே அவருக்கு அதே நினைப்புதான்... லவ்வ இதில்தான் காட்டுவீங்களா? கண்ணீருடன் பேசிய சம்யுக்தா
திரையுலகைப் பொறுத்தவரையில் எங்கு பார்த்தாலும் விவாகரத்துக்கள் அதிகமாகிவிட்டன. திருமணமாகி ஓரிரு மாதங்களிலேயே இருவருக்குள்ளும் ஒத்துப்போகவில்லையென விவாகரத்து வாங்கிவிட்டு, தனித்தனியே வாழ்கின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கின்றது.
அந்தவகையில் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து, முத்தழகு போன்ற சீரியல்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சயமானவர்தான் நடிகை சம்யுக்தா.
அவர் சமீபத்தில்தான் சின்னத்திரை நடிகரான விஷ்ணுகாந்தை திருமணம் செய்தார்.
ஆனால், தற்போது இருவருக்கும் விவாகரத்தாகிவிட்டது.
தற்போது எங்கு பார்த்தாலும் சம்யுக்தா விஷ்ணுகாந்த் தம்பதியினரின் விவாகரத்து செய்துதான் ஹொட் டோக்.
விவாகரத்துக்குப் பின்னர் இருவரும் தங்கள் கருத்துக்களை மாறி மாறி தெரிவித்தனர்.
இதையடுத்து இன்ஸ்டாவில் பேசிய சம்யுக்தா, “திருமணத்தின் பின்னர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால், உங்கள் அன்பால் இப்போது மீண்டு வந்துள்ளேன்.
எனக்கு 22 வயதுதான் ஆகிறது. ஆனால், அவருக்கு வயது 32. அவர் என்னிடம் நடந்துகொண்ட விதம் எனக்கு பிடித்திருந்ததால் அவரைக் காதலித்தேன். அவரது வயதைக்கூட நான் பெரிதாக நினைக்கவில்லை.
என் அப்பா வீட்டுக்கு வருவது அவருக்கு பிடிக்கவில்லை. காரணம் என்னவென்றால், 24 மணி நேரமும் அவருக்கு அது வேண்டும். எப்பொழுதுமே அவருக்கு அதே நினைப்புதான். நான் அதற்கு இணங்கவில்லை என்றால், அவருக்கு கோபம் வரும்.
காதலை இதில்தான் காட்டுவீங்களா? இதுக்கு பேர் காதல் கிடையாது. திருமணம் முடித்தாலும் அனைவரும் காதலியுங்கள்” என்று சம்யுக்தா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.