விஷ்ணு விஷாலுக்கும், ஜுவாலா குட்டாலுக்கும் விவாகரத்தா...? வெளியான தகவல் - ரசிகர்கள் ஷாக்...!
விஷ்ணு விஷால், 2-வது மனைவியான ஜுவாலா குட்டாவை விவகாரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறதால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
நடிகர் விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
கடந்த 2018ம் ஆண்டு இவர் நடித்த சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ‘ராட்சசன்’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இப்படம் இவருடைய கெரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. சமீபத்தில் வெளியான ‘கட்டாகுஸ்தி’ படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பதிவு செய்தது.
குறிப்பிட்டு சொல்லப்போனால் விஷ்ணுவிஷாலின் சினிமா கெரியரில் இந்த படம் தான் விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்ற படமாக மாறியது.
நடிகர் விஷ்ணு விஷால், ரஜினி நடராஜன் என்பவரை விவாகரத்து செய்த பிறகு, பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு, படுக்கையில் இருந்தபடி நிர்வாண புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
விவாகரத்து செய்கிறாரா விஷ்ணு விஷால்?
விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது லால் சலாம் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, திருவண்ணாமலையில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பரவாயில்லை, மீண்டும் முயற்சித்தேன். நான் மீண்டும் தோல்வியடைந்தேன். மீண்டும் கற்றுக்கொண்டேன். கடைசி முறை தோற்றது என்னுடைய தவறு எதுவும் இல்லை... அது துரோகம் மற்றும் ஏமாற்றம்” என பதிவிட்டு வாழ்க்கை பாடம் என கேப்ஷனும் கொடுத்திருக்கிறார்.
தற்போது இது தொடர்பான செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் 2வது மனைவியையும் விவாகரத்து செய்யப்போகிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.