ஒருவழியாக காதலியை கரம் பிடித்த நடிகர் விஷால்- பட்டு வேட்டி சட்டையில் வெளியான படங்கள்
நடிகர் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் இன்றைய தினம் நடைபெறவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
விஷால்
கடந்த 2004ம் ஆண்டு வெளியான “செல்லமே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் விஷால். இந்த திரைப்படம் விஷாலின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி, அவரது கேரியரில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து விஷால் திமிரு, தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பாண்டிய நாடு, பூஜை, மருது, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளராக கலக்கிய விஷால் துப்பறிவாளன் 2ம் பாகத்தின் மூலம் இயக்குனராக மாறிவிட்டார்.
திருமண கொண்டாட்டம் ஆரம்பம்
இந்த நிலையில், நடிகர் விஷால் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் அவரை பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளன.
அதன் பின்னர், திருநங்கைகளின் அழகுராணி போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது அங்கு விஷால் மயக்கமடைந்தார். நோயிலிருந்து மீண்டு வந்த விஷால் அவருடைய பட ப்ரமோஷன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, நடிகர் சங்க கட்டிடம் திறந்தால் தான் தன்னுடைய திருமணம் நடக்கும் என கூறி வந்த விஷால், நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையாத நிலையில் சொன்னபடி திருமணம் செய்து கொள்வாரா? என பலரும் சந்தேகித்தனர்.
மாறாக, இன்றைய தினம் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரபலங்களின் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்பின்னர், தடபுடலாக விருந்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |



