இலங்கை தமிழனை மணந்து கொண்ட ரம்பாவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
15 வயதில் திரையுலகிற்கு அறிமுகமாகி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்றுவரை ரசிகர்களின் செல்லப்பிள்ளையாய் இருக்கிறார் நடிகை ரம்பா.
1990 மற்றும் 2000 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உட்பட பெங்காலி, போஜ்புரி, ஆங்கில படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ரம்பா.
ரஜினிகாந்த், மம்முட்டி, சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து மொத்தமாக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
7ம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவில் வேடமிட, இவரை பார்த்த இயக்குனர் ஹரிஹரன் மலையாள சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.
அசாத்திய நடிப்புத்திறனால் அனைவரையும் கவர்ந்துவிட, 15 வயதிலிருந்து முழுநேரமாக நடிப்பை தொடர்ந்தார். தொடர்ந்து வெற்றிப்படங்கள் குவிய ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்தார்,
2010ம் ஆண்டு கனடா வாழ் இலங்கை தமிழரான இந்திரகுமார் பத்மநாபனை மணந்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உட்பட மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியான ஒரு தகவலின்படி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஒரு முறை ஒரு திரைப்பட விழாவில் ரம்பா மற்றும் அவரது தொழிலதிபர் கணவரின் மொத்த நிகர மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.