பிரபல நடிகையை விரைவில் திருமணம் செய்யவுள்ள விஷால்
தமிழ் சினிமாவில் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் நடிகர்களில் விஷாலும் ஒருவர் அவரின் திருமணம் குறித்து தற்போது ஒரு செய்தி அதிகம் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஷால்
தமிழ் சினிமாவில் செல்லமே என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் நடிகர் விஷால். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் தேர்வு செய்யும் படங்கள் எல்லாம் அடிதடி படங்களாகத் தான் இருக்கும். இவர் சரத்குமாரின் மகளான வரலட்சுமியை காதலித்து வந்தார்.
இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சரத்குமார் திருமணத்திற்கு சம்மதிக்காக காரணத்தால் அனிஷா ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் வரை சென்று அதுவும் நடக்காமல் போனது.
இதனால் தனக்கு திருமண ராசியில்லை என்று எண்ணி நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி சில படங்களில் தொடர்ந்தும் நடித்து வந்தார்.
தற்போது திருமணம்
இந்நிலையில், விஷாலுக்கு ஜோடியாக நடித்த நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு போன்ற திரைப்படங்களில் நடித்த லக்சுமி மேனனை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.
லட்சுமி மேனனுக்கும் தற்போது 28 வயதாகின்ற நிலையில் அவருக்கு விஷாலுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. இந்த செய்தி இன்னும் அதிகார்பூர்வ தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |