இந்த 5 ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்ட தேவதையாம்! ஆண்களே மிஸ் பண்ணிடாதீங்க
பொதுவாக திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே அங்கு ஜோதிடம் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதிலும் ஆண்கள் தனக்கு எந்த ராசிக்கார பெண் வந்தால் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று அதிகமாகவே சிந்திப்பார்கள்.
இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 ராசிக்கார பெண்கள், அதிர்ஷ்டசாலிகளாகவும், ஆண்களுக்கு சிறந்தவர்களாகவும் கருதப்படுகின்றனர்.
கும்பம்
கும்ப ராசி பெண்களின் அணுகுமுறை மிகவும் அழகாகவும், அருமையாகவும் இருப்பதால் ஆண்கள் அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர்.
கும்ப ராசி பெண்ணை வாழ்நாள் முழுவதும் மிகவும் சிறந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்களது அன்பில் ஒருபோதும் மாற்றம் என்பதே இல்லை.
இந்த ராசி பெண்ணை நீங்கள திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில், அதிர்ஷ்டமானவராகவும், மகிழ்ச்சியானவராகவும் இருப்பீர்கள்.
மீனம்
மீன ராசி பெண்கள் தனது கணவருக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள். அனைத்து செயல்களிலும் மிகவும் சிறந்து விளங்கும் இவர்களை பாசத்தில் அடித்துக்கொள்ளவே முடியாதாம்.
ஆம் அந்த அளவிற்கு குடும்பம், கடமை, கணவர், புத்திசாலித்தனம் என அனைத்திலும் டாப் லிஸ்டில் தான் இவர்கள் இருப்பார்கள்.
ரிஷபம்
ஒரு விடயத்தினை வெளிப்படுத்தும் போது மிகவும் ஆழமாகவும், அழகாகவும் கூறும் இவர்கள், தனது முக்கியத்துவத்தை கணவருக்கு மிக சுலபமாக உணர்த்துவார்கள்.
நேர்மறையான சிந்தனை அதிகமாக இவர்களை எப்பொழுதும் தீப்பொறியாகவே காண்பீர்கள். அர்ப்பணிப்பு மிகுந்த இவர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் கணவருடன் துணை நின்று அவர்களை வழிநடத்துவார்கள். சிறந்த தாயாகவும் இவர்களை காணலாம்..
கடகம்
விசுவாசத்தில் சிறந்தவர்களாக இருக்கும் கடக ராசி பெண்ணை நீங்கள் திருமணம் செய்தால் பேரதிர்ஷ்சாலியாம். யோசிக்காமல் இவர்களை நீங்கள் நம்பலாம்.
பொய் சொல்வதை வெறுக்கும் இவர்கள், தனது வாக்குறுதிகளைக் காப்பாற்ற எந்த எலலைக்கும் செல்வதுடன், குடும்பத்தினரையும் தனது அன்பினால் கட்டிப்போட்டு வைப்பார்கள்.
துலாம்
மிகவும் துடிப்பாகவும், இரக்கமுள்ளவர்களாக இருக்கும் இவர்கள் தங்களது துணையையே திகைக்க வைக்கும் அளவிற்கு திறமை வாய்ந்தவர்கள். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையை உறுதி செய்ய விரும்பினால் துலாம் ராசி பெண்களை தெரிவு செய்யலாம்.
துலாம் ராசி பெண்ணை விரும்புபவர்கள் அதிர்ஷ்சாலிகளாக கருதப்படும் நிலையில் மறக்கமுடியாத தருணங்களை அன்பினால் அள்ளிக்கொடுப்பவர்கள்.