விருச்சிக ராசியில் பிறந்தவரா நீங்கள்?
12 ராசிகளுக்கும் பொதுவான சில குணாதிசயங்கள் காணப்படுகின்றன.
அந்த வகையில் விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்களைப் பார்த்தோமானால், இவர்கள் பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள்.
வாய் ஜாலம் மிக்கவர்களாக இருப்பார்கள். சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
குறும்புத்தனம் மிக்கவர்களாக காணப்படுவார்கள்.
தனக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதைக் குறித்து எந்தவித அலட்டலும் இல்லாமல் விடாப்பிடியாக நின்று சாதிப்பார்கள். இவர்களிடம் பேசி எவராலும் ஜெயிக்க முடியாது.
இவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். பார்க்கும்போது அப்பாவிகளைப் போல் இருந்தாலும் கோபம் அதிகமாக வந்தால் எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் வார்த்தைகளை சட்டென்று பேசி விடுவார்கள்.
எளிதாக உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். தன்னுடையவைகளை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
சேமிப்பில் அதிக ஆர்வம் உடையவர்கள். தர்மம் செய்வதில் கைதேர்ந்தவர்கள்.
இளமைக் காலத்தில் கஷ்டமான வாழ்க்கையை அனுபவித்தாலும் நடுத்தர வயதில் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்.