நான் இருக்கும்போதே இன்னொருத்தியா.. மனைவியின் தவறான முடிவால் உயிருக்கு போராடும் கணவன்!
மெக்ஸிகோ பகுதியைச் சேர்ந்தவர் ஜுயன் (Juan).இவரது மனைவி லியோனோரா (Leonora). சம்பவத்தன்று, லியோனோரா தனது கணவரின் மொபைல் போனில் அவர் பெண் ஒருவருடன் இருக்கும் புகைப்படங்களையும், உறவு வைத்திருக்கும் வீடியோக்களையும் கண்டு அதிர்ந்து போயுள்ளார். இதனால், உச்சக்கட்ட கோபத்திற்கு சென்ற லியோனோரா, இதுகுறித்து ஜுயனை ஒரு நிமிடம் கூட பேச அனுமதிக்காமல், அவரின் கால் மற்றும் கை பகுதிகளில் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியுள்ளார்.
மேலும், ஜுயனின் மொபைல் போனில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோ குறித்து பேசியே இந்த செயலில் லியோனோரா ஈடுபட்ட நிலையில், அப்போது வலியால் துடித்த ஜுயன், ஒரு வழியாக தனது மனைவியின் கையிலிருந்த கத்தியை பிடுங்கி எந்த புகைப்படத்தை பற்றி நீ பேசுகிறாய் என கேட்ட போது தான் மிகப் பெரிய உண்மை தெரிய வந்துள்ளது.
அந்த பெண் வேறு யாருமில்லை, நீ தான் என ஜுயன் தெரிவித்த நிலையில், கணவரின் பதிலைக் கேட்டு லியோனோரா ஆடிப் போயுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஜுயன் மற்றும் லியோனோராவின் இளமைக் காலத்தில் டேட்டிங் சென்ற போது எடுக்கப்பட்டதாகும்.
தான் மிகவும் இளமையாகவும், தற்போது இருப்பதை விட ஒல்லியாகவும் இருந்ததால் லியோனோராவால் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இதனிடையே, இவர்களின் வீட்டிற்குள் கூச்சல் மற்றும் அலறல் சத்தம் கேட்டுள்ள நிலையில், அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதன்பின்னர், லியோனோராவை கைது செய்துள்ள போலீசார், அவரை ஜெயிலில் அடைத்துள்ள நிலையில், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமீபத்தில் பழைய இ மெயில் ஒன்றின் மூலம் தனக்கு கிடைத்ததால் அதனை மொபைலில் சேமித்து வைத்ததாக ஜுயன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் அதிக முறை கத்திக்குத்து காயங்கள் பட்டுள்ளதால் ஜுயனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.