ஏன் சரியா விளையாடறது இல்லை? மீட்டிங்கில் விராட் கோலி அளித்த பதில்.. வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ!
இந்திய அணியில் அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட்கோலி அதன்பின்பு வரும் போட்டிகளில் சோர்வுடன் விளையாடி வருவது பெரும் விவாதத்திற்கு உள்ளாகியது.
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் கலகலப்பாக ஆடி அரைசதத்தையும் அடித்திருந்தார். இருந்தாலும் விராட் கோலி முன்பு போல் இல்லை ஆட்டத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும் என பிசிசிஐ எச்சரித்துள்ளது.
இந்திய அணியே சுழற்பந்துவீச்சில் திணறும் நிலையில், சுழற்பந்துவீச்சை அசால்டாக ஆடும் விராட்கோலியே அதில் தடுமாறி விக்கெட்டுகளை கொடுப்பது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டாவது டி20 முடிந்தவுடன் பிசிசிஐ விராட்கோலியிடம் மீட்டிங்கில் பேசியுள்ளனர். ஆட்டத்திறனின் பாதிப்பை பற்றி கேட்கையில், “பயோ பபுள் வந்த பிறகு முன்புபோல் விளையாட முடியவில்லை. கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு அழுத்தம் இருந்தது. அதிகளவில் ஓய்வு இல்லாததும் ஒரு காரணம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதனால், பிசிசிஐ விராட்கோலிக்கு 10 நாட்கள் வரை விடுப்பு வழங்கி உள்ளனர். மேலும் தொடர்ச்சியாக விளையாடும் ரிஷப் பண்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்த ஓய்வுக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஆட்டம் முக்கியமானதாக இருக்கும்.
அப்படி, இனி வரும் தொடர்களில் சொதப்பும் வீரர்களை ஓரம் கட்ட பிசிசிஐ எந்தவித தயவும் பார்க்காது என கூறப்படுகிறது.
ஏனென்றால், அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ள உலகக் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயதில் இருக்கிறது.