ஷாக்கில் புரோகிதர்....தாலி கட்டியதும் மணப்பெண்ணின் காலில் விழுந்த மாப்பிள்ளை!
சமீபத்தில் நடைப்பெற்ற திருமணம் ஒன்றில் தாலி கட்டி சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பிறகு மணப்பெண்ணின் காலில் விழுந்து மணமகன் ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பலரும் காலம் மாறிவிட்டது.
இது ஒரு நல்ல செயல் என்று நேர்மறையாக பதிவிட , வேறு சிலரோ இந்துக் கலாச்சாரம் கெட்டுவிட்டது என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் இருக்கும் மணப்பெண் திடி கரோடியவுக்கும் மணமகன் அர்னாவ் ராய்க்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தில் எல்லோரையும் மீறி மணமகன் மணமகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
இந்த வீடியோவை மணப்பெண் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து எங்கள் புரோகிதருக்கு இது புடிக்கவில்லை.
இருப்பினும் அவன் என் அருகில் வந்து நீ மிகவும் அதிர்ஷ்டசாலி பெண் என்று கூறினான் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் சமமாக நடத்துபவர்களை தேர்ந்தெடுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.