பாம்பு பிடிக்க வந்த இடத்தில் மலர்ந்த காதல்! பாம்புடன் போட்டோ ஷீட்
வித்தியாசமான முறையில் போட்டோ ஷீட் செய்த ஜோடிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ப்ரீ வெட்டிங் ஷூட்
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள் தங்களின் திருமணத்திற்கு முன்னர் தன்னுடைய துணையுடன் ப்ரீ வெட்டிங் ஷூட் செய்து கொள்கிறார்.
இதனை திருமணம் நடந்து முடிந்த பின்னரோ அல்லது விருந்துபசாரங்களின் போதோ உறவினர்கள் முன்னாள் போட்டு காட்டுவார்கள்.
மேலும் ப்ரீ வெட்டிங் ஷூட்டை அவர்கள் பிடித்தவாறு வித்தியாசமான முறைகளில் செய்து கொண்டு வருகிறார்கள்.
பாம்புடன் எடுக்க புகைப்படங்கள்
அந்த வகையில் வீட்டிற்கு ஒரு பாம்பு வருவதாகவும் அப்போது அதனை பிடிக்க வரும் போது தன்னுடைய துணையை பார்த்து செல்போனில் உரையாடுவது போன்றும் ஒரு தம்பதியினர் போட்டோ ஷீட் நடத்தியுள்ளார்கள்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனை பார்த்த இணையவாசிகள்,“ உங்களின் அலப்பறைகள் வர வர தாங்க முடியவில்லை.” என தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.