அந்த மனசு தான் கடவுள்...காசு வேண்டாம்! செருப்பு தைப்பவருக்கு உணவு கொடுத்த சாலையோர வியாபாரி
செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவருக்கு சாலையோர உணவு வியாபாரி ஒருவர் இலவசமாக உணவு வழங்கும் வீடியோ இணையத்தில் பாராட்டுக்களை அள்ளி வருகின்றது.
அந்த வீடியோவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் சாலையோர உணவு விற்பவரிடம் நின்று கொண்டிருக்கிறார்.
அப்போது அந்த உணவக உரிமையாளர் தொழிலாளியிடம் "ஒரு நாளைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து விட்டீர்களா?" என்று கேட்கிறார். மேலும், பணம் இல்லை என்றாலும் தனது கடைக்கு வரும்படியும் உதவி செய்யவே தான் இருப்பதாகவும் கூறுகிறார்.
செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவிய உணவு வியாபாரி
இதனை கேட்ட தொழிலாளி நெகிழ்ந்து போகிறார். மேலும் அந்த உணவக உரிமையாளர் தட்டில் ரொட்டி, டால் ஆகியவற்றை வைத்து தொழிலாளிக்கு சாப்பிட கொடுக்கிறார்.
இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து இணைத்தில் பகிர்ந்துள்ளனரை். இந்த வீடியோ தற்போது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மனிதர்கள் மத்தியில் இன்னும் மனிதம் வாழ்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்து காட்டு.