மின்னல் வேகத்தில் ஓட்டமாய் ஓடும் டயனோஸர் குட்டிகள்...ஜுராஸிக் பார்க் நிஜமாகி விட்டதா?
இணைய உலகம் ஆச்சரியங்களை அள்ளி தருவதில் நம்மை ஒரு போதும் ஏமாற்றுவதில்லை.
அந்த வகையில் "டைனோசர் குட்டிகள்" கூட்டம் ஆற்றங்கரையில் ஓடுவதைக் காணும் வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
எப்போ கல்யாணம்? அமீர் - பாவனி இடையே கொளுத்திப்போட்ட பிரியங்கா!
ஆச்சர்யத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியது வீடியோவில் காணப்படும் உயிரினங்கள், ஆற்றை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நீண்ட கழுத்துடன் கூடிய இளம் டைனோசர் இனத்தைச் சேர்ந்த சௌரோபாட்கள் போல காட்சியளிக்கின்றன.
This took me a few seconds.. ? pic.twitter.com/dPpTAUeIZ8
— Buitengebieden (@buitengebieden) May 4, 2022
எனினும் டைனோசர்களின் கூட்டம் அல்ல என்பதை சிறிது நேரம் உற்று பார்க்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது. "கோடிமுண்டிஸ் என்றும் அழைக்கப்படும் கோட்டிகள், புரோசியோனிடே குடும்பத்தைச் சேர்ந்தவை.
பாவனி முன்பு இலங்கை பெண்ணிடம் காதலை கூறிய அமீர்.... ஷாக்கான ரம்யா கிருஷ்ணன்!
அவை தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென்மேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பாலூட்டிகள்.
"கோடிமுண்டி" என்ற பெயர் பிரேசிலின் துபியன் மொழிகளிலிருந்து வந்தது. இந்த வைரல் வீடியோ ட்விட்டரில் 10.8 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது மற்றும் 48,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.