மலைப்பாம்புடன் டின்னர் டேட் சென்ற பெண்கள்! நெட்டிசன்களை அலறவிட்ட காட்சி
மலைப்பாம்புடன் டின்னர் டேட் சென்ற பெண்களின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்புகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு
பொதுவாக வெளிநாடுகளில் பாம்புகளை செல்லபிராணியாக வளர்ப்பார்கள். இன்னும் சிலர் சமைத்தும் சாப்பிடுவார்கள்.
ஆனால் இலங்கை இந்தியா போன்று தமிழர்கள் வாழும் பகுதியில் கோவில் கட்டி தெய்வாகமாக வழிபடுகிறார்கள். இந்த பழக்கம் தமிழர்களின் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டு செல்கிறது.
இதன்படி, இணையத்தில் விலங்குகளின் வியக்க வைக்கும் மற்றும் வேடிக்கையூட்டும் வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ காட்சி
வெளிநாட்டொன்றில் டின்னர் டேட்டிங்காக மலைப்பாம்பொன்றை இரு பெண்கள் அழைத்து சென்றிருக்கிறார்கள். குறித்த பெண்கள் ஒரு மேசையில் அமர்ந்து உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு குறித்த மலைப்பாம்பு உதவியும் செய்கிறது. இருவரும் ஒரு மனிதர் போல் குறித்த பாம்பை நடத்துகிறார்கள். ஆனால் குறித்த மலைப்பாம்பு மற்றைய மேசைகளில் அமர்ந்திருப்பவர்களை எதுவும் செய்யாமல் பெண்களுடன் அமைதியாக சாப்பிடுகிறது.
இந்த வீடியோ காட்சியை ilhanatalay_என்பவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.