ராணுவ வீரரின் காலில் விழுந்த குட்டி தேவதை! இயத்தை தொட்ட ஒரு நிமிட காட்சி
இந்திய ராணுவ வீரர் ஒருவருடைய காலில் விழுந்து சிறுமி ஒருவர் ஆசிர்வாதம் பெறும் வீடியோ சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ராணுவத்தில் பணிபுரிவது எளிதான காரியம் இல்லை.
எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு சேவை செய்வதையே கடமையாக கொண்டு பணியாற்றும் ராணுவ வீரர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள்.
வைரலாகும் வீடியோ ஒன்று அதனை நமக்கு நினைவு கூறியுள்ளது.
Raising patriotic young minds is a duty every parent owes to this great nation.
— P C Mohan (@PCMohanMP) July 15, 2022
Jai Hind ?? pic.twitter.com/mhAjLbtOvG
அந்த வீடியோவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் சிலர் தங்களுடைய சீருடையில் நிற்கின்றனர்.
சக வீரருடன் ஒருவர் பேசிக்கொண்டிருக்க தயங்கி தயங்கி அங்கு சிறுமி ஒருவர் செல்கிறார். சிறுமியை கண்டவுடன் அந்த வீரர் மகிழ்ச்சியடைந்து அவரது தலையை வருட நினைக்கும்போது திடீரென சிறுமி செய்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ செய்திருக்கிறது கருப்பு நிற உடை அணிந்திருக்கும் அந்த சிறுமி, வீரரின் காலை தொட்டு வணங்கவே, திகைத்துப்போன அந்த வீரர் சிறுமியை வாழ்த்துகிறார்.