துடி துடித்த பக்தர்! கூழ் காய்ச்சும் அண்டாவில் விழுந்து பரிதாபமாக பலியான அதிர்ச்சி - பதற வைத்த சிசிடிவி காட்சிகள்
Viral Video
Trending Videos
By Nivetha
மதுரையில் பழங்காநத்தம் பகுதியில் கூழ் காய்ச்சும் போது காக்கா வலிப்பு வந்து அண்டாவில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மேலத்தெரு முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் போது கூழ் காய்ச்சி கொண்டிருந்த நபர் காக்கா வலிப்பு வந்து தடுமாறியுள்ளார்.

நிலை தடுமாறிய அவர், அப்படியே அண்டாவில் விழுந்துள்ளார்.
இதைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்து, அவரை வெளியே மீட்க முயன்றனர்.
இருப்பினும், அண்டாவில் கூழ் கொதித்துக் கொண்டு இருந்ததால், அவரை எளிதாக வெளியே உடனே வெளியே எடுக்க முடியவில்லை.
நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், அந்த நபரை அண்டாவில் இருந்து ஒரு வழியாகப் பொதுமக்கள் வெளியே கொண்டு வந்து மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
— Mayur GY ?✂( Film Maker & Editor ) தளபதி (@DirectorMayurGY) August 2, 2022
இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கொதிக்கும் கூழில் விழுந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாகவே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US