1 வருடத்துக்கு பின் கன்னி ராசியில் புதன் பெயர்ச்சி: 12 ராசிகளுக்குமாக சிறப்பு பலன்கள்!
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாறி, மனித வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில், கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சாற்றல், கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார்.

மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், ஒருவரது ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அறிவாற்றல், கல்வித்திறன், பேச்சாற்றல் மற்றும் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என ஜோதிடம் கூறுகிறது.
இந்நிலையில், புதன் இன்று செப்டம்பர் 7 மதியம் 1.33 மணியளவில் தனது சொந்த ராசியான கன்னிக்குள் பெயர்ச்சியாகிறார். செப்டம்பர் 26 வரை கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புதன், சுமார் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த ராசிக்குத் திரும்புவதால், இந்தப் பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
அப்படி, கன்னி ராசியில் புதன் சஞ்சரிப்பதால் எந்த ராசிகளுக்கு சாதம், எந்தெந்த ராசிகளுக்கு பாதபம் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

12 ராசிகளுக்கமான பலன்கள்
மேஷம்
மேஷ ராசியின் 6-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வேலை தொடர்பான பயணங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு காலம் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் காதல் உறவுகள் வலுப்படும். காதலிப்பவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது.வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்த தடைகள் விலகும்.
மிதுனம்
மிதுன ராசியின் 4-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து நற்செய்திகள் கிடைக்கும். வணிகர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு காலம் சாதகமான சூழல் உருவாகும்.
கடகம்
கடக ராசியின் 3-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் ஆன்மீகம் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரிகளுக்கு சிறப்பான காலமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கவும், அரசியலில் இருப்பவர்களுக்கும் சாதகமான காலம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 2-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் உங்கள் பேச்சுத் திறனால் கடின சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணியிடத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு காலம் சாதகமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 12-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். இருப்பினும் பெரிய அளவில் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பிரச்சனைகளை பேசி தீர்ப்பது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். தேர்வுகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக வாகனம் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.
மகரம்
மகர ராசியின் 9-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம்.

கும்பம்
கும்ப ராசியின் 8-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதிகளில் ஈடுபடலாம். எனவே உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துச் செயல்படுவது நல்லது. கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 7-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். கூட்டு தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. அரசு தொடர்பான பணிகள் சிறப்பாக முடியும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காண
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |