முதல் நாளே சூடுபிடித்த பிக் பாஸ் வீடு : ஷதிகாவால் வெளிநடப்பு செய்த முனியம்மாள்!
பிக்பாஸ் சீசன் 10-ன் இன்றைய எபிசோடிற்கான மூன்றாவது Promo வீடியோ வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 10
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நேற்று மாலை பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 19 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், முதல் நாளிலேயே வீட்டுக்குள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.

முதல் நாளான இன்று கேப்டன் தேர்வு தொடர்பான Promo வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது மற்றும் மூன்றாவது Promo-க்களில் புதிதாக ‘Democracy Room’ என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த அறையில், சட்டமன்றத்தில் இருப்பதைப் போலவே ஆளும் அணி – எதிர் அணி என இரு தரப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தலைவராக ஷதிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், Democracy Room-ஐ ஷதிகா சற்று Rough-ஆக வழிநடத்துவதாக முனியம்மாள் குற்றம்சாட்டுகிறார். இதற்கு பதிலளித்த ஷதிகா, “உங்கள மாதிரி ஒரு ஆள உட்கார வெச்சிருந்தா, அது மாறத்தான் செய்யும்!” என அதிரடியாக பதிலடி கொடுக்கிறார்.

வெளிநடப்பு செய்த முனியம்மாள்
ஷதிகாவின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த முனியம்மாள், “நான் Democracy Room-ல இருந்து வெளிநடப்பு செய்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.
முதல் நாளே பிக் பாஸ் வீட்டில் ஆளும் அணி, எதிர் அணி என பிரிவுகள் உருவாகி, அதற்குள் மோதலும் வெடித்துள்ள நிலையில், இன்றைய எபிசோடில் இந்த விவகாரம் எந்த அளவுக்கு பூதாகரமாகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |