திடீரென்று சுருண்டு விழுந்த பூம்பூம் மாட்டுக்காரர்..... பாசத்தால் பதறி மாடு! ஓடி வந்து உதவிய குட்டி தேவதை
உரிமையாளர் மயங்கி விழுந்ததால் பூம்பூம் மாடு படும் பாடும் இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.
இசைக்கருவிகளை வாசித்து கொண்டு மாட்டு உரிமையாளர் மாட்டை ஓட்டிக்கொண்டு வீடு வீடாக போய்க் கொண்டிருந்தார். அவருக்கோ நல்ல பசி. கோவிட் மூன்றாவது அலையால் எந்த வீட்டிலும் அவருக்கு வந்து பணம் கொடுக்கவில்லை.
வாசலில் எட்டிப் பார்த்தப்படி திருப்பி அனுப்புகிறார்கள். ஒரு கட்டத்தில் பசியின் கொடுமையால் அந்த நபர் மயங்கி விழுந்து விடுகிறார். அவர் கூட்டிவந்த மாடோ, அவரது அருகிலேயே நின்று அவரை எப்படியாவது எழுப்பிவிட வேண்டும் என போராடுகிறது.
கடைசி வரை அவர் எழுந்திருக்காமலேயே மூர்ச்சியாகிக் கிடந்தார்.
வயதில் பெரியவர்களே அதை அசால்டாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டே செல்ல. அந்த வழியாக வந்த குட்டிக் குழந்தை ஒன்று இந்த காட்சியைப் பார்க்கிறது.
குழந்தை அவரின் அருகில் செல்ல மாடோ, குழந்தை தன்னைப் பார்த்து பயந்துவிடக் கூடாது என கொஞ்சம் நகர்ந்து நிற்கிறது.
அந்த குட்டி தேவதை மாட்டுக்காரருக்கு தண்ணீர் கொடுத்து சுய நினைவுக்கு வரச் செய்கிறது. மேலும் தன் பையைத்திறந்து தான் சாப்பிட வைத்திருந்த பழங்களை பசியால் வாடிய அவருக்குக் கொடுத்தது.
அவரோ, தன் செல் மாட்டுக்கு அதைக் கொடுத்தார்.அது பாசத்தோடு சாப்பிட்டது.
இந்தக் குட்டிக் குழந்தை செய்த செயலும், அந்த மாட்டின் பாசமும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.