18 நாட்களுக்கு பின் புதைக்கப்பட்ட அண்ணனின் சடலத்தை தோண்டிய எடுத்த தம்பி....பரபரப்பை ஏற்படுத்திய காட்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில், தனக்கு சொந்தமான இடத்தில் புதைக்கப்பட்ட இறந்த அண்ணனின் உடலை 18 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைத்த நபரின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கிராத்தூர் பகுதியை சேர்ந்த ஜெஸ்டஸ் கடந்த மாதம் 16ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது உடல் அவரது தம்பிக்கு சொந்தமான தோட்டம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில் உடன்பாடு இல்லாத ஜெஸ்டஸின் தம்பி கிறிஸ்டோபர், குடும்பத்தினரோடு சேர்ந்து அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து எதிர்ப்பை மீறி வேறோரு இடத்தில் அடக்கம் செய்துள்ளார்.
இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.